சாரல் 16
சாரல் 16 காலை நிதானமாக எழுந்த ராகினி நான்கு நாட்களுக்குப் பின் நிம்மதியாக குளித்தாள். என்ன தான் ரவீந்தர் கேம்ப்பர் வேனின் வெளியே ஷவர் வைத்து அவளை மறைக்க பிளாஸ்டிக் பேனல் வைத்துக் கொடுத்திருந்தாலும் ஒரு குளியலறையில் நிம்மதியாக குளிக்கும் தன்மை அதில் கிடைக்கவில்லை. குளித்து முடித்து தயாரானதும் நேராக ரவியிடம் வந்து நின்றாள். "அண்ணா நான் பக்கத்து வீட்டு அக்கா கூட பின்னாடி இருக்குற அந்த மலை.. மலைதானே அது.. அங்க வரைக்கும் போயிட்டு வர்றேன்." என்று கதவைத் தாண்டிப் போக முயல, "அங்க போகணும்ன்னா நம்ம இடத்துகுள்ள நேரா தான் போகணும். வெளில போய் போக முடியாது மா." என்றான் அக்கறையாக. "அது தெரியும். அந்த அக்காவை கூட்டிட்டு வர்றேன்." என்று அவள் கிளம்ப, சட்டென்று நினைவு வந்தவனாக, "அவங்க தம்பி இருப்பான், அவனை வர சொல்லு மா. சின்ன வேலை இருக்கு." என்று சொல்லிவிட்டு காலையில் தான் உண்ண உணவை தயார் செய்ய ஆரம்பித்தான். ஏனெனில் முதல் நாளில் இருந்து அந்த பக்கத்து வீட்டுப் பெண் ராகினிக்கு உணவு கொடுத்து விடுகிறாள். இவனுக்கும் அவளை கெஞ்சி உண்ண வைக்க நேரமில்லை. அதனால் க...