சாரல் 77 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 77 "வாங்க, உள்ள கூட்டிட்டு வாங்க" என்று மகிழ்வாய் அழைத்தார் வைதீஸ்வரி. அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை ரகுராம் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மனைவியின் முகத்தை வாஞ்சையாக பார்த்துக் கொண்டிருக்க, "நீங்க வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று அவர் அதட்டவும் ரவியின் புதிய வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்களை வரவேற்று காலை உணவுக்கு அழைத்துச் சென்றார். வைதீஸ்வரி அத்தனை மகிழ்வாய் வீட்டிற்குள் முதலில் அழைத்தது வேறு யாரையும் அல்ல, ரவியும் எழிலும் புதிதாக வாங்கிய நாட்டு மாடும் அதன் சிறு கன்றையும் தான். புதுமனைக்கு பசுவை அழைப்பது மரபு என்பதாக அன்று பேச்சு வாக்கில் அவர் உரைத்திருக்க, ரவி உடனடியாக நல்ல விற்பனையாளரை சந்தித்து புது வீட்டிற்கு செல்லும் போது அவர்களுடைய பசுவையே அழைத்துச் செல்ல திட்டமிட்டு விட்டான். பிள்ளை இல்லாத அந்த அன்னையின் மனம் குளிர்ந்து போனது. "எப்படியும் கொஞ்ச நாள்ல வாங்க நினைச்சது தான் பெரியம்மா. இப்ப பாருங்க என்னோட கனவான தற்சார்பு வாழ்க்கை முறைக்கு முழுசா வந்தாச்சு. ...