சாரல் 78 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 78
புதுமனை புகுவிழாவுக்கு
வந்தவர்கள் எல்லாம் ரவி ஏற்பாடு செய்த இயற்கை உணவை உண்டுவிட்டு அனைத்தையும் பாராட்டிவிட்டே
கிளம்பினர்.
மாலையில் ரகுராம்,
வைதீஸ்வரி, ஶ்ரீதர், புகழ்,ராகினி, ரவீந்தர், எழிலிசை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
இருந்த இரண்டு
கன்டெய்னர் வீடுகளில் பெரியவர்கள் தாங்கள் தங்கிக் கொள்வதாக கூறிவிட, எவ்வளவோ சிறியவர்கள்
கேட்டுக்கொண்டும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.
கீழே இருந்த
அறைகளில் ஆளுக்கு ஒன்றாக இளையவர்கள் சென்று இளைப்பாற முடிவு செய்தனர்.
புகழ் ராகினியை
கவனமாக அழைத்துச் செல்ல, அதனை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.
"உங்க
தங்கச்சி எப்படி மாறி போயிட்டா பார்த்திங்களா? நைட்டு டின்னர் அவ தான் ரெடி பண்ணுவாளாம்
நான் சமையல் பக்கம் வரக் கூடாதாம்." என்று எழில் அவன் தோளில் சாய்ந்து சிரித்தாள்.
"புகழுக்கு
அவ மேல எவ்வளவு அன்பு பார்த்தியா இசை? ராணி ராணின்னு ராணி மாதிரியே அவளை பார்த்துக்கறான்.
நான் தான் உன்னை சரியா கவனிக்கிறது இல்ல." என்று வருத்தமாக கூறினான் ரவி.
"என்ன
ஜோக் பண்ணிட்டு இருக்கீங்களா? வாங்க போய் ரெஸ்ட் எடுப்போம். ஆறு மணிக்கு வேலை இருக்கு.”
என்று அவள் அறைக்குள் வேகமாக நடக்க எட்டி அவள் கைகளை பிடித்தான் ரவி.
"எப்பவும்
வேலை தானா? வா" என்று அருகே அழைத்து தன் தோளோடு அணைத்துக் கொண்டு,
"உனக்கு
என்ன இசை வேணும்? எதுவுமே உனக்காக நான் வாங்கவே இல்லையே! ஸ்பெஷலா ஏதாவது கேளு".
"ஒன்னும்
வேணாம் சன்ஷைன்" என்று அவன் கன்னத்தைக் கிள்ளி அவள் முத்தம் வைக்க,
"இந்த
ரெண்டு மாசம் ஏற்கனவே வீட்டு வேலையை காட்டு என்னை பேச்சிலர் மாதிரி இருக்க வச்ச, இன்னிக்கு
தான் புது வீட்டுக்கு வந்துட்டோம்ல. சம்திங் ஸ்பெஷல்" என்று அவளை அப்படியே வாகாக
தூக்கிக் கொண்டான்.
அவளும் அவன்
கழுத்தில் தன் கரத்தை மாலையாக கோர்க்க, அவனது இதழ்கள் அவள் முகத்தில் கவிதை எழுதத்
துவங்கியது.
"சன்ஷைன்
ராகினி பிரக்னென்ட்டா இருக்கா. என் அம்மா எந்த ஹெல்ப்பும் பண்ண மாட்டாங்க. அத்தைக்கும்
வயசாகுது. இப்ப நானும்... அப்படி ஆனா சமாளிக்க முடியாது. அதுனால" என்று அவனை முத்தமிடுவது
போல பாவனை செய்து அவன் இளகிய நேரத்தில் மெல்ல அவனிடமிருந்து விலகிச் சென்றாள்.
போகும் அவளை
மோகம் வழியும் விழிகளுடன் நோக்கியவன்,
"நீ என்ன
சாமியாரா இசை? உன் அம்மா விஷயத்துல பொறுமை, ராகினி விஷயத்துல அமைதி, பெரியம்மா கிட்ட
அடக்கம், பிரதீஷ் கிட்ட அன்பு, புகழ் கிட்ட பாசம், என்கிட்ட காதல் ஆனாலும் எல்லாத்தையும்
எப்படி சரியான இடத்துல கத்திரிக்கோல் போட்டு உணர்வுகளை நிறுத்துற?" என்று அவளது
கையை விடாமல் பிடித்துக் கொண்டு வினவ,
"ரொம்ப
ஈஸி. போதும்ன்னு மனசார நினைக்கணும். ஐ ஆம் சாட்டிஸ்பைட். இது தர்ற நிம்மதியை எதுவும்
தராது. கிடைச்சா நல்லது. கிடைக்கலையா அதுக்கும் மனசு நல்லதுன்னு அதை முழுமையா நிறைவா
ஏத்துக்க ஆரம்பிக்க எல்லா உணர்வுகளும் எங்கெங்கே எப்படி வெளிப்படணுமோ அப்படி வெளிப்படும்.
கோபம் வராம இருக்க நீங்க சொன்ன மாதிரி நான் சாமியார் இல்ல தான். ஆனா அந்த கோபத்தால
எந்த பயனுமே இல்லன்னு புரியும்போது எதுக்கு என் சக்தியை அந்த கோபத்துல வீண் பண்ணணும்?
அதுக்கு கூட கொஞ்சம் உங்களை காதலிச்சிட்டு போறேன்." என்று மீண்டும் அவன் மார்பில்
அவள் முகம் புகைக்க,
"நீ ஒரு
புதையல் இசை. எனக்கு மட்டும் கிடைச்ச அதிசய புதையல். சரி நாம நாலு நாள் எங்கயாவது போயிட்டு
வருவோமா? ஹனிமூன் மாதிரி." என்றவன் கண்கள் ஆசையில் மின்னியது.
"ஏன் அந்த
ஹனிமூன் இங்க கொண்டாட கூடாதா?" என்று கேலியாக சிரித்தாள் எழிலிசை.
"இங்க
எல்லாரும் இருக்காங்க" என்று சோகமாக முகம் வைத்து அவன் கூறியபோது,
"உங்க
ஹனிமூன் லொகேஷனுக்கு நாலு நாள்ல போயிட்டு வர முடியாது. இப்ப சீசனும் இல்ல." என்று
அவள் அந்த அறையில் இருந்த பெரிய ஜன்னலுக்கு முன்னே இருந்த திட்டில் அமர்ந்தாள்.
எல்லா ஜன்னல்களிலும்
இது போல திட்டு அமைத்து கட்டி இருந்தனர். அங்கே அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கவோ,
சாய்ந்து கொண்டு புத்தகம் வாசிக்கவோ எளிதாகவும் அழகாகவும் இருந்த அவ்விடத்தில் அவள்
அமர்ந்ததும்,
"என் ஹனிமூன்
லொகேஷனா?" என்று ரவி விழிக்க,
"ஆமா.
ஶ்ரீநகர் போகணும்ன்னு தானே சொன்னிங்க? அதுவும் ஏப்ரல் மாசத்துல டூலிப்ஸ் பெஸ்டிவல்
நடக்கும் போது போகணும்னு தானே ரெண்டு வருஷம் முன்னாடி போட்ட வீடியோல சொன்னிங்க? இப்ப
இப்படி முழிக்கிறீங்க” என்று சிரித்தாள்.
சில நிமிட யோசனைக்குப்
பிறகு, "ஆமா அங்க போட்ல போகும்போது வீடியோ எடுத்தப்ப சொன்னேன். இசை எனக்கே மறந்து
போச்சு. அதுவும் ரெண்டு வருஷத்துக்கு முன்ன சொன்னது. நீ எப்படி நினைவு வச்சிருக்க?"
என்று அவன் படபடக்க,
"உங்க
ஒவ்வொரு வீடியோவும் எனக்கு மனப்பாடம். எப்படி மறக்க முடியும்?"
"இசை,
பிளீஸ் உண்மையை சொல்லு" என்று அவன் கரத்தை அவள் தோளில் அழுத்தமாக பதித்து வினவ,
"உங்க
முதல் சப்ஸ்கிரைபர் நான் தான். ‘அழகி’ உங்க எல்லா வீடியோவும் முதல்ல பார்த்து கமென்ட்
போட்டவளும் நான் தான். அந்த கல்யாண கலவரம் நடந்து ரொம்ப உடைஞ்சு போய் இருந்தப்ப உங்க
வீடியோ பார்த்தாலும் கமென்ட் பண்ண மாட்டேன். நீங்க கூட என் கமென்ட் வரலைன்னு ஒரு வீடியோல
எப்படி இருக்கேன்னு விசாரிச்சிங்க." என்று எழில் கூறிக்கொண்டிருக்க,
அவளை எலும்புகள்
உடைந்து போகும் அளவுக்கு நெருக்கமாக அணைத்து அவள் இதழை முற்றுகையிட்டிருந்தான் ரவீந்தர்.
அவனது உடல்மொழி
கூறியது அவனது பல நாள் தேடல் அவள் தானென்று.
அவனது அருகாமையை
எந்த காரணமும் காட்டி ஒதுக்காமல் அவனது ஆசைக்கு இசைந்து கொடுத்தாள் அவனது இசை.
மெல்ல மெல்ல
அவனது உடல் இறுக்கத்தை தளர்த்தவும் சிவந்து லேசான எரிச்சலை வெளிப்படுத்தியிருந்த தன்
இதழ்களை நாவால் வருடி, அவனை ஆதரவாக அணைத்தாள்.
"இந்த
மாதிரி டிராவல் பண்ணி வீடியோ எடுத்து போடப் போறேன்னு சொன்னப்ப யாரும் எதிர்த்து எதுவும்
சொல்லலன்னாலும் யாரும் சப்போர்ட் பண்ணவும் இல்ல இசை. எனக்கு யார் கிட்டயும் போய்
நான் இது செய்தேன் பாருங்கன்னு காட்டி சொல்லத் தெரியலை. முதல் வீடியோ போட்டுட்டு
அரை மணி நேரமா வியூ போச்சா, கமென்ட் வந்துச்சான்னு நான் உத்து பாத்த்துட்டு இருந்தப்ப,
ஒரு வார்த்தையில இல்லாம அந்த முழு வீடியோ பத்தி ஒரு பாராவுக்கு நீ கமென்ட் பண்ணி இருந்த.
அந்த நிமிஷம் எப்படி இருந்தது தெரியுமா?
நாம இதுல கண்டிப்பா
ஏதாவது பெருசா செய்வோம்னு நம்பிக்கை விதை விதைச்சது நீ தான் இசை. இந்த அழகி தான்"
என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தினான் ரவீந்தர்.
முதலில் பதிலேதும்
கூறாமல் சிறு புன்னகையை பரிசளித்த அவனது இசையை அவன் உற்று நோக்கவும்,
"அப்ப
தெரியாம துணையா இருந்தேன். இப்ப துணையா கூடவே இருக்கேன். எப்பவும் இருப்பேன்"
என்று நெற்றியில் முட்டி விட்டு அங்கிருந்து ஓட முயன்றாள்.
"ஏய் எங்க
போற?" என்று அவள் கைவிரல்களை விடாமல் பிடித்துக் கொண்டு கள்வனாக அவன் வினவ,
"ஆசையா
எல்லாத்தையும் ஏற்பாடு செய்தா போதுமா? ஆடு மாடு கோழிக்கு யாரு சாப்பாடு போடுறது?
செடிக்கு தண்ணி விடுறது யாரு? ம்ம்…" என்று புருவம் உயர்த்தி அவள் கேட்கவே அவனும்
அவளுடன் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலானான்.

கருத்துகள்
கருத்துரையிடுக