சாரல் 73 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 73 பணம் கடனாக ஜனகராஜ் கேட்டிருந்தால் கண்டிப்பாக உதவி செய்திருப்பார் பரசுராம். ஆனால் தன்னுடைய பங்குதாரர் என்று கூறி ஒரு நிறுவனத்தில் பணம் பெற்றுச் சென்றது அவருக்கு மிகப் பெரிய அவமானமாகவும் அவமரியாதையாகவும் இருந்தது. ஏற்கனவே பல முறை ஜனகராஜை காஸ்மோ கிளப்பில் பார்த்திருக்கிறார். அன்றும் தனது கோபத்தை அவரிடம் வெளிப்படுத்த அவர் தேர்வு செய்த இடம் அதுவாகவே இருக்க, இவர் சென்ற போது ஜனகராஜ் மாவட்ட டி.எஸ்.பியுடன் ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். ஜனாவிடம் பேசிவிட்டு அவர் சரிவராவிட்டால் போலீஸில் புகார் கூறும் எண்ணத்தில் இருந்தவர் இங்கே அவர் யாருடன் விளையாடுகிறார் என்று அறிந்து அது சரிவராது என்று எண்ணி கிளம்பி விட்டார். ஆனால் நேராக அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் ஏற்கனவே தனது நிறுவனத்தில் கையாடல் செய்ததற்கான சாட்சியங்களை காட்டிவிட்டு, இப்பொழுது பொய்யுரைத்து மோசடி செய்ததையும் நிரூபித்து, போலீஸில் கூறினால் செல்வாக்கை பயன்படுத்தலாம். ஆனால் நேரடியாக சோஷியல் மீடியாவில் கூறிவிட்டால் ஜனகராஜின் மரியாதை கெடுவதோடு அவர்கள் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் என்ற ஒரே காரணத்தி...