மேற்கே உன் சாரல்மழை -1
சாரல் 1 பனி போர்வை பேர்த்திய மலை முகடுகளும் இருள் விலகாத வானமும் சில்லென்று மேனியை தழுவிடும் தென்றல் காற்றும் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் புத்துணர்வை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த அதிகாலை வேளை. வாசலில் அன்னை நீர் தெளித்து விட்டிருக்க, கோலமிட வெளியே வந்து இயற்கையை தனக்குள் மென்மையாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள் எழிலிசை. தந்தை பின்னால் உள்ள குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டதும், அன்றைய நாளின் அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டப் போவதை உணர்ந்தவளாய், கோலமாவை லாவகமாக வளைத்து வளைத்து கோலம் போட்டு விட்டு அதனை சற்று தள்ளி நின்று ஒரு பார்வை 'சரியாக இருக்கிறதா?' என்று பார்த்தாள். திருப்தியாக மனதிற்குத் தோன்ற, முன்வாசல் வழியாகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள சந்தில் அவள் நுழைய இருந்த நேரம் அவர்கள் வீட்டின் அருகில் ஹார்ன் ஒலி சற்று அதிகமாக ஒலிக்கவே கவனம் கவரப்பட்டு அவ்விடம் தன் பார்வையைத் திருப்பினாள். ஒரு காரும் அதைத் தொடர்ந்து பெரிய லாரி ஒன்றும் வருவது மட்டுமே அந்த பனிக்கு இடையில் தெரிந்தது. யாரேனும் இந்த வழியாக செல்லக் கூடும் என்று ஒதுக்க முடியாது. ஏனெனில் இது ஒன்றும் பெரிய வீதி அல்ல. பல வீடு...
Comments
Post a Comment