இடுகைகள்

merke_un_saralmazhai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 80 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 80   எழிலிசையும் வைதீஸ்வரியும் ராகினியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். அவள் பழைய ராகினியாக இருந்திருந்திருந்தால் சுகமாக படுத்துறங்கி அதனை ரசித்து மகிழ்ந்திருப்பாள்.   ஆனால் இன்றைய ராகினி எறும்புடன் போட்டி போடும் அளவுக்கு சுறுசுறுப்பு நிறைந்தவளாக மாறி இருக்க, அவர்களின் அன்பைக் கனிவோடு அவ்வப்போது மறுத்து தன் தாய்மையின் சுகவேதனைகளைத் தாங்கிக் கொண்டு புகழின் கடையை முழுவதுமாக அவளே கவனித்துக் கொண்டிருந்தாள்.   புகழ் புதிதாக ஆரம்பித்த தொழிலில் கவனம் செலுத்த தன்னால் முயன்றவரை அவனுக்கு உதவினாள்.   எழில் அன்று பெரியவர்களை அழைத்து ராகினிக்கு வளைகாப்பு நடத்த நாள் பார்க்கக் கூறினாள்.   ஶ்ரீதர் தான் செலவுகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல,   "அப்பா நம்ம வீட்டு விசேஷம் நீங்க நடத்தி வைக்கணும்ன்னு மட்டும் தான் ஆசைப்படுறோம். செலவெல்லாம் இன்னார் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. இப்பவே நாம எல்லாரும் சேர்ந்து தான் பண்ணையில உழைக்கிறோம். நாளைக்கு அவர் கிட்ட சொல்லி சம்பளம் போட சொல்லவா?" என்றாள் உரிமைக் கோபத்துடன்.   "அப்படி இல்லம்மா....

சாரல் 79 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 79   புதிய வீட்டின் முதல் நாள் இரவு. புகழ் ராகினியை தான் மேல் சாய்த்துக் கொண்டு அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.   இதற்கு முன் அவர்கள் இருக்குவருக்கும் அதிக நெருக்கம் இருந்ததில்லை. காதல் என்ற எண்ணம் வளர்ந்ததில்லை. திருமணம் முடிந்து விட்டது என்பதால் பரஸ்பர அன்போடு இருந்தனர். ஆனால் தாய்மை அடைந்த பின் தான் புகழ் மேல் அவளுக்கு தனி பிரியம் எழுந்தது.   தன் அண்ணன் பல கனவுகளுடன் இருந்தவன் என்று அவளறிவாள். ஆனால் புகழ் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் தன்னைப் போலவே பொறுப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவன் தானே! ஆனால் இன்று தன் அண்ணனுடன் இணைந்து புது புது விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பது, செலவுகளை கட்டுக்குள் வைப்பது, ஊராரின் மரியாதையை ஈட்டிக் கொண்டது என்று அவனது பட்டியல் நீண்டு கொண்டே போனது.   அதிலும் அவள் என்ன சொன்னாலும் ‘சரி ராணி’ என்ற அவனின் பதில் அவளை குளுமையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது என்பதே உண்மை. அவள் மீது தவறே இருந்தாலும், அவளே சண்டை போட்டாலும் பொறுத்து, நிதானமாக அந்த தவறை சுட்டிக் காட்டுவதும், எழிலிடம் சென்று குறையாகக் கூறாம...

சாரல் 78 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 78   புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்கள் எல்லாம் ரவி ஏற்பாடு செய்த இயற்கை உணவை உண்டுவிட்டு அனைத்தையும் பாராட்டிவிட்டே கிளம்பினர்.   மாலையில் ரகுராம், வைதீஸ்வரி, ஶ்ரீதர், புகழ்,ராகினி, ரவீந்தர், எழிலிசை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.   இருந்த இரண்டு கன்டெய்னர் வீடுகளில் பெரியவர்கள் தாங்கள் தங்கிக் கொள்வதாக கூறிவிட, எவ்வளவோ சிறியவர்கள் கேட்டுக்கொண்டும் அவர்கள் முடிவில் உறுதியாக இருந்தனர்.   கீழே இருந்த அறைகளில் ஆளுக்கு ஒன்றாக இளையவர்கள் சென்று இளைப்பாற முடிவு செய்தனர்.   புகழ் ராகினியை கவனமாக அழைத்துச் செல்ல, அதனை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரவி.   "உங்க தங்கச்சி எப்படி மாறி போயிட்டா பார்த்திங்களா?  நைட்டு டின்னர் அவ தான் ரெடி பண்ணுவாளாம் நான் சமையல் பக்கம் வரக் கூடாதாம்." என்று எழில் அவன் தோளில் சாய்ந்து சிரித்தாள்.   "புகழுக்கு அவ மேல எவ்வளவு அன்பு பார்த்தியா இசை? ராணி ராணின்னு ராணி மாதிரியே அவளை பார்த்துக்கறான். நான் தான் உன்னை சரியா கவனிக்கிறது இல்ல." என்று வருத்தமாக கூறினான் ரவி.   "என...

சாரல் 77 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 77   "வாங்க, உள்ள கூட்டிட்டு வாங்க" என்று மகிழ்வாய் அழைத்தார் வைதீஸ்வரி.   அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியை ரகுராம் இதுவரை பார்த்ததே இல்லை. அவர் மனைவியின் முகத்தை வாஞ்சையாக பார்த்துக் கொண்டிருக்க,   "நீங்க வந்தவங்களை கவனிக்காம இங்க என்ன பாத்துட்டு இருக்கீங்க?" என்று அவர் அதட்டவும் ரவியின் புதிய வீட்டு புதுமனை புகுவிழாவுக்கு வந்தவர்களை வரவேற்று காலை உணவுக்கு அழைத்துச் சென்றார்.   வைதீஸ்வரி அத்தனை மகிழ்வாய் வீட்டிற்குள் முதலில் அழைத்தது வேறு யாரையும் அல்ல, ரவியும் எழிலும் புதிதாக வாங்கிய நாட்டு மாடும் அதன் சிறு கன்றையும் தான்.   புதுமனைக்கு பசுவை அழைப்பது மரபு என்பதாக அன்று பேச்சு வாக்கில் அவர் உரைத்திருக்க, ரவி உடனடியாக நல்ல விற்பனையாளரை சந்தித்து புது வீட்டிற்கு செல்லும் போது அவர்களுடைய பசுவையே அழைத்துச் செல்ல திட்டமிட்டு விட்டான்.   பிள்ளை இல்லாத அந்த அன்னையின் மனம் குளிர்ந்து போனது. "எப்படியும் கொஞ்ச நாள்ல வாங்க நினைச்சது தான் பெரியம்மா. இப்ப பாருங்க என்னோட கனவான தற்சார்பு வாழ்க்கை முறைக்கு முழுசா வந்தாச்சு.   ...

சாரல் 76 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 76   வாசலில் வந்து நின்ற சரோஜாவை கண்டு அனைவரும் புரியாது விழிக்க, முதலில் சுயவுணர்வுக்கு வந்தது வைதீஸ்வரி தான்.   "வாங்க சம்மந்தி அம்மா" என்று அழைத்து வரவேற்பாக முன்னே சென்றார்.   ராகினி யார் இருக்கிறார்கள், என்ன நினைப்பார்கள் என்று நாசூக்கு பார்க்கும் ரகமல்ல என்பதால் அவரைக் கண்டதும் முகத்தைத் திருப்பிக் கொண்டு எழுந்து உள்ளே சென்று விட்டாள்.   புகழும் எழிலும் அமைதியாக நிற்க, ஶ்ரீதர் மருமகளைத் தொடர்ந்து உள்ளே சென்றார்.   வந்த சரோஜா நேராக மகனிடம் சென்று நின்றார்.   "கடனெல்லாம் கட்டிட்டன்னு அதோட என்னை மறந்துட்டல்ல புகழு? அம்மா என்ன செய்யிறேன்னு பார்க்க கூட வரலையே!" என்று கண்ணீரை முந்தானையில் துடைத்தார்.   புகழுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் இருந்தாலும் வீட்டில் நல்ல விஷயங்கள் வரிசை கட்டி நிற்கிறது. இப்பொழுது இவரோடு சண்டையிட்டு நல்ல மனநிலையைக் கெடுத்துக்கொள்ள அவன் விரும்பவில்லை.   அதனால் அவன் அமைதியாக நின்றான்.   "இரண்டு நாள் முன்ன வீட்டு ஓனர் வந்திருந்தாரு புகழு. அவருக்கு ஏதோ புது வீ...

சாரல் 74 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 74   எழிலும் ரவியும் ஊர் திரும்பி இருந்தனர். ரகுராமிடம் அமைதியாக நடந்தவைகளை விளக்கினான் ரவி.   அவர் கூட அமைதியாக அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டார். ஆனால் வைதீஸ்வரி மிகவும் உடைந்து போனார்.   "யாருக்கு என்ன பாவம் செய்தோம் மா நாம? தம்பிக்கு அறிவு இருந்தது திறமை இருந்தது நேர்மை இருந்தது, அதோட சேர்த்து தன் உழைப்பையும் போட்டு தானே பணம் சம்பாதிச்சாரு. யாரையும் அவர் ஏமாத்தலையே, ஏன் அந்த ஜனகராஜை கூட தம்பி ஏமாத்தலையே. அவன் பங்கு பணத்தை கொடுத்துட்டு தானே அவன் கையாடல் பண்றான்னு வெளில அனுப்பினார்? ஆனா மனித மனம் எவ்வளவு இழிவா இருக்கு பாரு எழில்! தனக்கு நேர்மையா இருந்தவனை ஏமாற்றின குற்றவுணர்வு இல்லாம தன் மனைவி முன்ன முகத்திரையை கிழிச்சிட்டான்னு தம்பியையும் மேகலாவையும் கொன்னு, ரவியை இப்படி ஏமாத்தி பணத்தை பிடுங்கி. அது போதாதுன்னு ராகினி வாழ்க்கையைக் கெடுக்க நினைச்சு. நல்ல வேளை அவனுக்கு ஒரு பொண்ணு இருக்க போய் ராகினியை நாசம் பண்ணுற எண்ணம் அவனுக்கு வரல போல. இல்லன்னா அந்த ஈனப் பய அதையும் செய்திருப்பான்" என்று கண்ணீரில் வாய் ஓயாமல் அழுது கரைந்தார்.   "நம்மளால ...