சாரல் 22 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 22 வேகமாக வீட்டின் பக்கவாட்டு வழியாக வேலியின் ஓரம் ஓடினாள் எழில். வேலியைப் பற்றிக்கொண்டு பார்த்த பொழுது அந்த மையிருட்டிலும் ரவியும் அவனோடு இருவரும் எதையோ தேடுவது நன்றாகப் புலப்பட்டது. யோசிக்காமல் கேட்டை நோக்கி நடந்தாள். பதற்றமாக ரவி அங்கும் இங்கும் அலைந்தபடி கைபேசியை காதில் வைத்துக்கொண்டு இருந்தான். "ரவி சார்! ரவி சார்! என்னாச்சு?" என்றபடி அவள் உள்ளே வர, "இசை, இசை உன்னோட தானே ராகினியை அனுப்பி வச்சேன், அவ எங்க?" என்றான் பதற்றமாக. "நாங்க திரும்பி வந்து ரொம்ப நேரம் ஆகுதே சார். இப்போ போய் ராகினியை என்கிட்ட விசாரிக்கிறீங்க?" என்று புரியாமல் வினவினாள் எழில். "அவ வரல இசை. நாங்க கேம்பெர் வேன்ல கிடந்த க்வில்ட்டை பார்த்து, அவ தூங்கிட்டான்னு நினைச்சுக்கிட்டு இருந்தோம். இப்போ தான் பெரியம்மா அவளை சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தாங்க. ஆனா அங்க போர்வை தான் சுருண்டு இருந்திருக்கு. நான் தான் அவ தூங்கறதா தப்பா நினைச்சு இருந்திருக்கேன். கொஞ்சம் யோசிச்சு சொல்லு இசை. அவ ஏதாவது சொன்னாளா?" என்று படபடத்தான். "கால்...