இடுகைகள்

jeyalakshmi Karthik லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 26 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 26   ராகினியை கீழே இறங்கச் சொல்லி அழைத்து வந்த காவலர் கூற, கோபத்துடன் இறங்கியவள் வேகமாக சென்று நின்றது ரவியிடம் தான்.   "என்ன உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு போலீஸ் வச்சு மிரட்டுறியா?" என்று எடுத்தவுடன் சண்டைக்கு நிற்க, அங்கிருந்த யாருக்கும் விஷயம் புரியவில்லை, ரவி உட்பட.   இவர்களை அழைத்து வந்தது குறித்து வி.ஏ.ஒவுக்கு தகவல் கொடுக்க, ஊர் பிரமுகர்கள் வேகமாக அவ்விடம் அடைந்தனர்.   "என்ன பேசுற ராகினி? நேத்து இந்த நேரம் காணாம போன நீ. உன்னை காணலன்னு நாங்க எல்லாரும் துடிச்சு போய் உட்கார்ந்து இருக்கோம். நீ என்னடான்னா வந்ததும் ஏதேதோ பேசுற?" என்று வைதீஸ்வரி அவள் தோளைத் திருப்பிக் கோபமாக வினவ,   "நீங்க சும்மா இருங்க பெரியம்மா. உங்களை பத்தி எல்லாம் எங்கம்மா சொல்லி இருக்காங்க. காரணம் கிடைச்சதும் இவனை பாக்கெட்ல போட்டுகிட்ட மாதிரி என்னையும் போட்டுக்க டிரை பண்ணுறீங்க. இதுல என் அப்பா அம்மா சாவை தற்கொலைன்னு ஃப்ரேம் பண்ணுறீங்களா?" என்றதும்,   தன்னை தவறாக பேசியதைக் கூட உணராதவர், "உன் அப்பா அம்மா பத்தி உனக்கு யாரு சொன்னாங்க டா...

சாரல் 21 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 21   ராகினி கடுங்கோபத்துடன் குளிரடிப்பதை உணர முடியாத அளவுக்கு உள்ளே வெம்மை ஏற நடந்து கொண்டிருந்தாள் .   தன் அண்ணன் ஏதோ மனமாற்றத்திற்காக சென்னையில் இருந்து சில நாட்கள் இங்கே தங்க வந்திருக்கிறான் என்று அவள் நம்பிக் கொண்டு அமர்ந்திருக்க , அவனோ தன்னுடைய தனிமை பயணத்துக்கு தாய் தந்தையின் தொழில் தடையாக வந்து விடுமோ என்று எண்ணி அவர்களையே காரணம் காட்டி இங்கே வந்து முழுவதுமாக இடம்பெயர்ந்து இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை .   அதிலும் அவனுடைய முடிவை திணிப்பதற்காக தாய் தந்தை விபத்தில் இறந்ததை தற்கொலை என்று பேசும் அவனது கிறுக்குத்தனத்தை ஏற்கவே முடியாது என்று எண்ணியவள் இனி அவனுடன் இங்கே தங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் .   சென்னை வீட்டின் சாவி எப்படியும் காளியம்மாளிடம் தான் இருக்கும் . இனி எதுவாகிலும் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இடத்தில் இருந்து மெயின் ரோடு செல்லும் சாலையில் வந்து நின்றாள் .   இது வரை வீரமாக...