சாரல் 12 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 12 மறுநாள் விடியல் அனைவருக்கும் இயல்பாக தத்தமது வேலைகளுடன் கழிய புகழ் மட்டும் அதிசயமாக வீட்டில் இருந்தான் . அவனை பார்த்தபடியே சாமிக்கு பூ வைத்து பூஜித்த ஶ்ரீதரன் , வெளியில் இருக்கும் விளக்குப் பிறையில் பணத்தை வைத்துவிட்டு , " செல்லம் , உன் தம்பிக்கு விளக்கு மாடத்துல காசு வச்சிருக்கேன் . எடுத்துட்டு கிளம்ப சொல்லு .” என்று உரக்க கூறினார் . எழில் அவ்விடம் இல்லாததால் அவருக்கு பதில் வராமல் போக , புகழ் எழுந்து தந்தையிடம் வந்தான் . " அப்பா , நான் தப்பு பண்ணினேன் தான் . ஆனா இப்போ மாறிட்டேன் பா . உள்ளூர்ல வேலை கிடைக்க மாட்டேங்குது பா . நேத்து அக்கா கூட கடை வைக்க இடம் பார்க்க போன இடத்தில அவமானம் . என் நண்பன் கிட்ட வேலைக்கு கேட்டதுக்கு மானங்கெட்டு போச்சு பா . நான் வெளியூர் போய் ஒழுங்கா படிச்சு சம்பாதிச்சு கடனை அடைக்கிறேன் பா . என்னை நம்பி அனுப்புங்க பா " என்று நா தழுதழுக்கக் கூறினான் . அவனை ஆழ்ந்து நோக்கிய ஶ்ரீதரன் , " நீ சொ...