இடுகைகள்

நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

reserved titles for my story

தேனினும் இனிது நாவல் காதிலே பேசவா நாவல் மோகனம் பாடும் வேளை நாவல் இனி வாழ்வேனோ இனிதாக நாவல் வன்மம் கொண்ட வெண்ணிலவு நாவல் வாழ்தலினிது நாவல்

சாரல் 8 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 8 செல்ஃபி ஸ்டிக்கை மடித்து உள்ளே வைத்த ரவீந்திருக்கு பின்னே வந்து நின்றாள் ராகனி. "அண்ணா எப்ப சென்னை போறோம்?" என்றாள் கோபமாக, அவளுக்கு அவன் பதிலளிக்க வாய் திறந்த நேரம், நேற்று அவன் காட்டிய இடத்தில் குழி தோண்டி கான்கிரீட் போட்டு விட்டுப் போனதை சரிபார்த்து நீர் விட அந்த மேஸ்திரி வேலியின் உள்ளே நுழைந்தார். "வணக்கம் தம்பி" என்று மரியாதை நிமித்தம் கூறியவர்,  "பின்னால உள்ள ஓடையில தண்ணி எடுத்துட்டு வர்றேன் தம்பி. இங்க உங்க தேவைக்கு தண்ணிக்கு என்ன செய்ய போறீங்க? ஏற்பாடு பண்ணியாச்சா?" என்று கரிசனையாக விசாரித்தார். அவர் பேச்சில் ராகினி முகம் சுருங்கி, இவன் இப்பொழுது தனக்கு பதிலளிக்க மாட்டான் என்று கோபம் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியே சென்றாள். அவன் அவரிடம், "ஆமா அண்ணா, இன்னிக்கு போர் போட ஆள் வர்றாங்க. இந்த கான்கிரீட் எப்ப அண்ணா செட் ஆகும்? ஏன்னா நான் அப்ப தான் கம்பெனில சொல்லி ஷிப்மெண்ட் பண்ண சொல்ல முடியும்" என்று யோசனையாகக் கூறினான். "இன்னும் ஒரு நாள்ல எல்லாமே செட் ஆகிடும் தம்பி. நீங்க தான் வெறும் பேஸ்மட்டம் போட்டா போதும்ன்னு  சொல்றீங்க. அது ...

சாரல் 7 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 7 தங்கள் வேனை நோக்கி சற்று வயதான மனிதர் கரடு முரடான பாதையில் நடந்து வருவதை கவனித்த ரவீந்தர் அவருக்கு வெளிச்சம் தெரிவது போல விளக்கைத் தூக்கிப் பிடித்தான். "தம்பி, வணக்கம் பா" என்று அவர் கை கூப்ப, அவனும் விளக்கை அங்கே இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, "வணக்கம் சார்" என்று அவனும் மரியாதையாக கரம் குவித்தான். "என்ன தம்பி இப்படி வெட்ட வெளில வண்டில வந்து தங்கி இருக்கீங்க?"என்று நேரடியாக விஷயத்துக்கு வர, அவன் லேசான தயக்கத்தோடு, "சார் நீங்க?" என்று இழுத்தான்.  "நான் பக்கத்துல, அதோ தெரியுதே... அந்த வீட்ல இருக்கேன் பா. இங்க தான் சேது மடை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கம்பவுண்டரா இருக்கேன். தனியா ஏன் பா இருக்கீங்க?" என்று அறிமுகம் செய்து கொண்டு வினவினார். "நல்லது சார். இடம் வாங்கி கட்டி இங்கேயே செட்டில் ஆகப்போறோம். வண்டில தங்கிக்க வசதி இருக்கு. அதுனால நான் கிளம்பி வந்தோம். ஒரு பிரச்சனையும் இல்ல." என்று வேனை திறந்து காட்டினான். அதில் பின் புறம் முழுவதும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருக்க, "நீங்க தங்கலாம் சரிதான் தம்பி. ஆனா வயசுப் பிள்ள...

சாரல் 6 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 6 இரவு நேரத்து வானில் நிலவு பாலாய் உருகி வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருந்தது. தந்தைக்கு கூடத்தில் அமர்ந்து உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில். "ஏன்மா நூல் எல்லாம் சரியா இருந்ததா? எல்லாமே நீ சொன்ன கலர் தானே? இன்னிக்கு வேலை பார்க்கும் போது சவுகரியமா இருந்ததா?" என்று ஶ்ரீதரன் மகளை கேட்டுக்கொண்டே உணவை ஒரு கவளம் எடுத்து வாயில் வைத்தார். "ஆமா பெரிய பட்டும் பவுசும் தான். இவ போடுற எம்பிராய்டரிக்கு இந்த பேச்சு." என்று சமையலறையில் பாத்திரங்களை உருட்டி நொடித்துக்கொண்டார் சரோஜா. எழில் தலை தாழ்த்தி அமர்ந்து விட, "அவ கிடக்கறா விடு செல்லம்" என்று மகளை சமாதானம் செய்தவர் மனைவியை கண்டிக்க முடியாத தன் நிலையை எண்ணி வருந்தினார். முன்பெல்லாம் சரோஜா என்ன பேசினாலும் கேட்டுகொள்வார், ஏனெனில் அவருக்கு வரும் சொற்ப வருமானத்தை வைத்து இரு பிள்ளைகளை வளர்த்த சரோஜாவின் சாதுர்யம் தனக்கு வராது என்று அவர் எண்ணியதுண்டு. ஆனால் அது எல்லாமே புகழின் படிப்பை முதன்மையாக வைத்து அவர் பிள்ளைகளுக்குள் பேதம் பார்த்த போதே சுக்கு நூறாக உடைந்து போனது. அதிலும் அதன் பின் சரோஜா செய்த காரியங்கள் சிலவற்றா...

சாரல் 5 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 5  பரசுராம் சென்னையில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர். அவரது அன்பு மனைவி மேகலா. அவரும் பணக்காரக் குடும்பத்தில் சீமாட்டியாக வளர்ந்தவர். அவர்கள் திருமணம் நிகழ்ந்தவுடன் ஒரே வருடத்தில் பிறந்தவன் ரவீந்தர். அவனை சரியாக ஏந்தி எடுத்து இரண்டு வருடம் வளர்க்கவே மேகலா வெகுவாக சிரமப்பட்டார். எல்லாவற்றுக்கும் சுற்றி வேலையாட்கள். பகட்டான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு வீட்டில் இருந்து எப்பொழுதும் குழந்தையை கவனிக்க முடியவில்லை. அதனால் பிறந்தது முதலே ரவீந்தர் அன்னை தந்தையிடம் இல்லாது வேலையாட்கள் அரவணைப்பில் வளர்ந்தான். அதனாலேயே அவன் யாருடனும் ஒட்டியது இல்லை. பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஹாஸ்டல் வாசம். விடுமுறை விட்டாலும் அவனுக்கு பிடித்த பெரியப்பா ரகுராம் வீட்டுக்கு சென்று விடுவான். அவருக்கு குழந்தை இல்லை என்பதால் ரவீந்தர் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் பரசுராம் போல பணக்காரர் கிடையாது. வங்கி வேலையில் இருந்து நல்ல படியாக சேமித்து நிம்மதியாக வாழும் உயர் நடுத்தர வர்க்கம். அவரிடம் அவன் ஒட்டிக் கொண்டதால் பணத்தின் அருமை, சேமிப்பின் அவசியம்,  அத்தியாவசியத்துக்கும் ...

சாரல் 4 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
சாரல் 4 தங்கள் கேம்பர் வேன் பின்புறம் அவனது டெண்டை விரித்து, தங்கை அமர்ந்து கொள்ள ஒரு மடக்கு சேரை எடுத்துப் போட்டான். "அண்ணா இப்போ சொல்லப் போறியா இல்லையா? என்னை ஏன் அண்ணா இங்க கூட்டிட்டு வந்த? " என்று பழைய பல்லவியை பாட ஆரம்பித்தாள் ராகினி. "காலைல இருந்து எத்தனை தடவை தான் ராகினி இதே கேள்வி கேட்ப? " என்று சலித்துக்கொண்ட ரவீந்தர் உணவு சமைக்க தேவையானவற்றை பின்புறம் இருந்த சேமிப்பு பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்து அடுக்கினான். ஒரு மடக்கு டேபிளை மேலிருந்த கம்பார்ட்மெண்டில் இருந்து இறக்கி வைத்து அடுப்பை அதன் மேல் வைத்து  சிறு தோசை தவாவை வைக்க, "அண்ணா தோசையா?" என்று முகம் சுருக்கினாள் ராகினி. "இல்ல டா. உனக்கு ஆம்லேட் போடுறேன்." என்று சொன்னதும் பல்லைக் காட்டியவள் "நான் பல தடவை கேட்கறது மட்டும் தான் உன் மனசுல பதியுது ஆனா நீ எனக்கு பதிலே சொல்லாம இருக்கிறது தெரியலையா?" என்று அவன் முதுகில் வந்து சாய்ந்ததும், "எல்லாமே உனக்கு சொல்லித்தான் தெரியணுமா ராகினி? நீ ஒன்னும் குழந்தை இல்லையே? ஏன் கூட்டிட்டு வந்தன்னு கேட்குற நீ, நான் விட்டுட்டு வந்தா எங்...

சாரல் 3 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 3 அன்னை வேலைக்கு கிளம்பிச் சென்றதும் வீட்டின் இதர வேலைகளை செய்து முடித்துவிட்டு வெளித் திண்ணைக்கு அருகே கதவடியில் அமர்ந்து கொண்டாள் எழிலிசை. கையில் எம்பிராய்டரி ஃப்ரேமில் பாதி வரையப்பட்ட ஓவியம் அவளுக்காகக் காத்திருக்க, பென்சிலைக் கொண்டு மீதியை வரைந்தாள். அந்த ஓவியத்துக்கு ஏற்ற வண்ணங்கள் கொண்ட நூலை நேற்றே அவள் எடுத்து வைத்திருக்க, அதனை ஊசியில் கோர்க்கும் நேரம் வண்டியில் வந்து இறங்கினான் புகழேந்தி. அவனைக் கண்டதும் எழுந்த பெருமூச்சை அடக்குவது சிரமமாக இருந்தது எழிலுக்கு. "அக்கா சாப்பாடு எடுத்து வை முகம் கழுவிட்டு வர்றேன்." என்று அவன் பின்னால் சென்றான். காலையில் எழுந்து வெளியே சென்றால் அப்பா வேலைக்கு சென்ற பின் வீட்டுக்கு வந்து சாப்பிடும் தம்பி இன்று காலை சீக்கிரம் வந்தபோது எழிலுக்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அப்பா வெளியே வந்ததும் வண்டியை எடுத்துக்கொண்டு சென்றவன் இதோ இப்பொழுது தான் மீண்டும் வருகிறான். உணவை கொடுத்தால் உண்டு ஒரு மணி நேரம் படுத்து எழுந்து மீண்டும் வெளியேறி விடுவான். மறுபடி அவனை இரவு அப்பா தூங்கிய பின்னால் தான் பார்க்க முடியும். அப்பாவுக்கும் அவனுக்கும் ஏழ...

சாரல் 2 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 2 சென்னையின் அதிவிரைவு வாழ்க்கைக்குப் பழகிப் போன ராகினி காலையில் இந்த சேதுமடை வந்தது முதலே அண்ணனைக் குடைந்து கொண்டு இருந்தாள். "அண்ணா எப்ப ஊருக்கு போவோம்?எதுக்கு என்னையும் கூட்டிகிட்டு வந்த? எனக்கு எவ்வளவு போர் அடிக்குது தெரியுமா?" என்று ஒரு மணி நேரத்திற்குள் பத்து முறை கூறி விட்ட தங்கையை உக்கிரமாக முறைத்தான் ரவீந்தர். "இங்க பாரு, நானே உன்னால தேவையில்லாம நாலு முறை டேக் எடுக்க வேண்டியதா போச்சுன்னு கடுப்புல இருக்கேன் ராகினி. தயவு செஞ்சு என் ஸ்க்ரீன்ல வராத. இடையில பேசாத. நான் டப்பிங் எல்லாம் பண்ண மாட்டேன். எல்லாமே லைவ் வாய்ஸ் தான். உன் குரல் இடையில கேட்டுக்கிட்டு இருக்கு. அப்பறம் அதுக்கு தனியா நான் ஆடியோ எடிட் பண்ணனும்." என்று கூறியவனைக் கண்டு ராகினி கோபத்துடன், "நானும் அதை தான் சொல்றேன். இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது உன்னோட டிரிப்புக்கு என்னை கூட்டிகிட்டு போயிருக்கியா? இப்போ மட்டும் ஏன் என்னை  கூட்டிகிட்டு வந்த?" என்று சிறு குழந்தை போல கால்களை தரையில் உதைத்து அவனை விட்டு விலகிச் சென்றாள். போகும் அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு, "அடுத்த வீட...

சாரல் 1

படம்
சாரல் 1 பனி போர்வை பேர்த்திய மலை முகடுகளும் இருள் விலகாத வானமும் சில்லென்று மேனியை தழுவிடும் தென்றல் காற்றும் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் புத்துணர்வை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த அதிகாலை வேளை. வாசலில் அன்னை நீர் தெளித்து விட்டிருக்க, கோலமிட வெளியே வந்து இயற்கையை தனக்குள் மென்மையாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள் எழிலிசை. தந்தை பின்னால் உள்ள குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டதும், அன்றைய நாளின் அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டப் போவதை உணர்ந்தவளாய், கோலமாவை லாவகமாக வளைத்து வளைத்து கோலம் போட்டு விட்டு அதனை சற்று தள்ளி நின்று ஒரு பார்வை 'சரியாக இருக்கிறதா?' என்று பார்த்தாள். திருப்தியாக மனதிற்குத் தோன்ற, முன்வாசல் வழியாகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள சந்தில் அவள் நுழைய இருந்த நேரம் அவர்கள் வீட்டின் அருகில் ஹார்ன் ஒலி சற்று அதிகமாக ஒலிக்கவே கவனம் கவரப்பட்டு அவ்விடம் தன் பார்வையைத் திருப்பினாள். ஒரு காரும் அதைத் தொடர்ந்து பெரிய லாரி ஒன்றும் வருவது மட்டுமே அந்த பனிக்கு இடையில் தெரிந்தது. யாரேனும் இந்த வழியாக செல்லக் கூடும் என்று ஒதுக்க முடியாது. ஏனெனில் இது ஒன்றும் பெரிய வீதி அல்ல. பல வீடு...

காதல் அறிமுகம்

படம்
 காற்றுக்குமிழியா காதல்? கதை அறிமுகம் "உள்ள வாங்க ஈசன் சார்" என்று வரவேற்பாக அழைத்தாள் நறுமலர். "இருக்கட்டும் மலர் மேடம்" என்று தவிர்த்தவரின் முன் இடுப்பில் கையூன்றி நின்றார் சிவகாமி. "நறுமலரை முறைத்தபடி ஏன் டி வயசு பொண்ணு இருக்கிற வீடு, அத்தாக்காரி நீயே அடங்காம இருந்தா, அவளை எப்படி டி  பசங்க கூட பேசாதன்னு சொல்றது. உள்ள போடி" என்று நாகரிகமில்லாமல் பேசினார். "நான் வர்றேன் நீங்க உள்ள போங்க" என்று அவரை உள்ளே அனுப்பிய நறுமலர், தன்னை சங்கடமாக பார்த்த ஈசனைக் கண்டு, "அதெல்லாம் கண்டுக்காதீங்க சார். அவங்க ஒரு டிப்பிக்கல் மாமியார் மெடீரியல். இந்த வயசுல நான் யாரோட பேசினா இவங்களுக்கு என்ன? சொன்னலும் கேட்கமாட்டேன்னு தெரிஞ்சு சொல்றாங்க பாருங்க. ஆனா பேத்தியை மட்டும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க சார். இவங்க பேச்சை நான் பெருசா எடுத்திருந்தா வீட்டுக்காரரும் இல்லாம நான் இவங்க ரெண்டு பேரோட தெருவுக்கு தான் வந்திருப்பேன்." என்று சொன்னவள், "வீட்டிக்குள்ள வரலன்னாலும் தோட்டத்துல சேர் இருக்கு அங்க உட்கார்ந்து பேசலாம் வாங...