காதல் அறிமுகம்
காற்றுக்குமிழியா காதல்? கதை அறிமுகம்
"உள்ள வாங்க ஈசன் சார்" என்று வரவேற்பாக அழைத்தாள் நறுமலர்.
"இருக்கட்டும் மலர் மேடம்" என்று தவிர்த்தவரின் முன் இடுப்பில் கையூன்றி நின்றார் சிவகாமி.
"நறுமலரை முறைத்தபடி ஏன் டி வயசு பொண்ணு இருக்கிற வீடு, அத்தாக்காரி நீயே அடங்காம இருந்தா, அவளை எப்படி டி பசங்க கூட பேசாதன்னு சொல்றது. உள்ள போடி" என்று நாகரிகமில்லாமல் பேசினார்.
"நான் வர்றேன் நீங்க உள்ள போங்க" என்று அவரை உள்ளே அனுப்பிய நறுமலர், தன்னை சங்கடமாக பார்த்த ஈசனைக் கண்டு,
"அதெல்லாம் கண்டுக்காதீங்க சார். அவங்க ஒரு டிப்பிக்கல் மாமியார் மெடீரியல். இந்த வயசுல நான் யாரோட பேசினா இவங்களுக்கு என்ன? சொன்னலும் கேட்கமாட்டேன்னு தெரிஞ்சு சொல்றாங்க பாருங்க. ஆனா பேத்தியை மட்டும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க சார். இவங்க பேச்சை நான் பெருசா எடுத்திருந்தா வீட்டுக்காரரும் இல்லாம நான் இவங்க ரெண்டு பேரோட தெருவுக்கு தான் வந்திருப்பேன்." என்று சொன்னவள்,
"வீட்டிக்குள்ள வரலன்னாலும் தோட்டத்துல சேர் இருக்கு அங்க உட்கார்ந்து பேசலாம் வாங்க சார்" என்று அழைத்தாள்.
இதற்கு மேல் அவள் அழைப்பை தவிர்க்க முடியாதவர் தோட்டத்து சேரில் வந்து அமர்ந்தார்.
"வீட்டுக்காரர் இல்லன்னா வீட்டுக்குள்ளையே இருக்கணும்ன்னு அவங்க காலத்துல இருந்திருந்தா அதுக்கு நான் ஆளா சார். அப்படி நான் இருந்திருக்கணும்ன்னா அதுக்கு அவங்க பையன் நான் வீட்டை விட்டு வெளில போய் சம்பாதிக்க தேவையில்லாத அளவுக்கு சம்பாதிச்சு வச்சிட்டு போயிருக்கணும்." என்று சொன்னவள் காபியை நீட்ட,
"இல்லம்மா கோவிந்தன் வந்திடுவான். போய் தான் சமையல் பண்ணனும்." என்று தவிர்க்க பார்த்தார்.
"அட இருங்க சார். இன்னிக்கு இட்லியும் காரச்சட்னியும் செஞ்சிருக்கேன். ஹாட்பாக்ஸ்ல போட்டு தரேன். எடுத்துட்டு போங்க." என்று இயல்பாக உரைத்து விட்டு அமர்ந்தாள்.
"இங்க பாருங்க மலர் மேடம், நான் கண்டிப்பா உங்க கிட்ட இன்சூரன்ஸ் பாலிசி போட்டுடறேன்." என்று உதட்டை மடித்துச் சிரித்தார்.
"ஹாஹாஹா" என்று வாய்விட்டு சிரித்த நறுமலர், "ஏன் சார் போயும் போயும் ஒரு எல்.ஐ.சி பாலிசிக்காக நான் இப்படி கூப்பிட்டு பேசுவேன்னு நினைக்கிறீர்களா? என் வீட்டு காம்பவுண்ட் தாண்டி உள்ள வந்த மூணாவது ஆண் நீங்க தான்." என்று சொன்னதும் அவர் திருதிருவென்று விழித்தார்.
"முதல்ல ஆளு சிலிண்டர் போடுற பையன் அப்பறம் தண்ணி கேன் போடுறவன் இப்போ நீங்க" என்று வாய் பொத்தி சிரித்தாள்.
அவருக்கு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் "நான் என்ன போடணும்ன்னு சொல்லுங்க மலர் மேடம்" என்று கேட்க,
"எதுவும் போட வேண்டாம். எனக்கு பெருசா நட்பு வட்டம் இல்ல. என் நண்பனா இருங்க ஈசன் சார்." என்று தலை சாய்த்துக் கேட்டார் நறுமலர்.
"ரொம்ப நல்லதா போச்சும்மா. இனிமே பசங்க கூட வெளில போகாதன்னு சொல்ல மாட்ட தானே? ஏன்னா உனக்கே பாய் பிரென்ட் இருக்கும் போது நீ என்னை சொல்ல முடியாது" என்று கேட்டபடி காலியாக இருந்த இருக்கையை ஆக்ரமித்தாள் புண்யா.
ஈசன் மீண்டும் சங்கடமாக உணர்ந்தார்.
"அங்கிள் பீல் பிரீ. நான் இப்படி தான். கொஞ்சம் ஓப்பன் டைப்." என்று அவள் தாயின் கையில் இருந்த காபியை பிடுங்கிக் குடித்தாள்.
"அவளை விடுங்க ஈசன் சார். கோவிந்தன் பத்தி சொல்லுங்க. அவன் எப்படி? நல்லா பழகுவானா?" என்று ஆர்வமாக வினவினாள்.
"அங்கிள் உங்களுக்கு ஒரு பையன் இருக்கானா என்ன? பார்த்தா நம்பவே முடியல. யூ ஆர் ஸ்டில் யங்" என்று புண்யா சிலாகிக்க, ஈசனுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.
"கோவிந்தன் வித்தியாசமனவன் மா. பிடிச்சா நல்லா பழகுவான். இல்லனா கண்டுக்க கூட மாட்டான்." என்று மலருக்கு பதிலளித்தார்.
"அப்போ சரியான ஆட்டிட்டுட் டூட்ன்னு சொல்லுங்க" என்று புண்யா பதிலளிக்க ஈசனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
"புண்யா சிலருக்கு தான் யாரை எங்க வைக்கணும்ன்னு தெரியும். அதை தெரிஞ்சு நடந்தா அதுக்கு பேர் ஆட்டிட்டுட் இல்ல, புத்திசாலித்தனம்" என்று நறுமலர் கூற இதை கேட்டில் நின்று கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு முகத்தில் புன்னகை படர்ந்தது.
"என்னவோ போங்க. எனக்கு நாளைக்கு டென் தவுசன் பணம் வேணும். அக்கவுண்ட்டுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க." என்று எழுந்து உள்ளே செல்ல திரும்பியவள், "பை அங்கிள்" என்று ஈசனையும் பார்த்து சிரித்து விட்டுச் சென்றாள்.
அவள் போனதும் உள்ளே வந்தவன், "ஹாய் ஆன்ட்டி" என்று புண்யா அமர்ந்திருந்த நாற்காலியை ஆக்கிரமிப்பு செய்தான்.
"ஹாய்" என்று கேள்வியாய் நறுமலர் புருவம் நெறிக்க, அவளிடன் தன் வலக்கரத்தை நீட்டி "நான் விந்தன்" என்று அறிமுகம் செய்து கொண்டான்.
"விந்தன்??" என்று திகைப்பாய் நறுமலர் நோக்க,
"நான் சொன்ன என் பையன் கோவிந்தன்." என்று புன்னகை சிந்தினார் ஈசன்.
அவனை தலை முதல் கால் வரை ஆராய்ச்சியாக பார்த்தவளுக்குத் தோன்றிய ஒரே எண்ணம், இவன் சாதாரணமானவன் இல்லை என்பதே.
கண்களில் காந்தத்தின் ஈர்ப்பும், அதை மிஞ்சிடும் புன்னகையின் ஈர்ப்பும் விந்தனை வித்தைக்காரன் போல வாய் பிளந்து பார்க்க வைத்தது.
~~~~
நறுமலர், புண்யா, ஈசன், கோவிந்தன், சிவகாமி இவங்கள சந்திக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
Comments
Post a Comment