சாரல் 21 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 21 ராகினி கடுங்கோபத்துடன் குளிரடிப்பதை உணர முடியாத அளவுக்கு உள்ளே வெம்மை ஏற நடந்து கொண்டிருந்தாள் . தன் அண்ணன் ஏதோ மனமாற்றத்திற்காக சென்னையில் இருந்து சில நாட்கள் இங்கே தங்க வந்திருக்கிறான் என்று அவள் நம்பிக் கொண்டு அமர்ந்திருக்க , அவனோ தன்னுடைய தனிமை பயணத்துக்கு தாய் தந்தையின் தொழில் தடையாக வந்து விடுமோ என்று எண்ணி அவர்களையே காரணம் காட்டி இங்கே வந்து முழுவதுமாக இடம்பெயர்ந்து இருப்பதை அவளால் தாங்கிக் கொள்ள இயலவில்லை . அதிலும் அவனுடைய முடிவை திணிப்பதற்காக தாய் தந்தை விபத்தில் இறந்ததை தற்கொலை என்று பேசும் அவனது கிறுக்குத்தனத்தை ஏற்கவே முடியாது என்று எண்ணியவள் இனி அவனுடன் இங்கே தங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள் . சென்னை வீட்டின் சாவி எப்படியும் காளியம்மாளிடம் தான் இருக்கும் . இனி எதுவாகிலும் அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் இடத்தில் இருந்து மெயின் ரோடு செல்லும் சாலையில் வந்து நின்றாள் . இது வரை வீரமாக...