இடுகைகள்

ஜெயலட்சுமி கார்த்திக் நாவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 26 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 26   ராகினியை கீழே இறங்கச் சொல்லி அழைத்து வந்த காவலர் கூற, கோபத்துடன் இறங்கியவள் வேகமாக சென்று நின்றது ரவியிடம் தான்.   "என்ன உன் திட்டம் எல்லாம் எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு போலீஸ் வச்சு மிரட்டுறியா?" என்று எடுத்தவுடன் சண்டைக்கு நிற்க, அங்கிருந்த யாருக்கும் விஷயம் புரியவில்லை, ரவி உட்பட.   இவர்களை அழைத்து வந்தது குறித்து வி.ஏ.ஒவுக்கு தகவல் கொடுக்க, ஊர் பிரமுகர்கள் வேகமாக அவ்விடம் அடைந்தனர்.   "என்ன பேசுற ராகினி? நேத்து இந்த நேரம் காணாம போன நீ. உன்னை காணலன்னு நாங்க எல்லாரும் துடிச்சு போய் உட்கார்ந்து இருக்கோம். நீ என்னடான்னா வந்ததும் ஏதேதோ பேசுற?" என்று வைதீஸ்வரி அவள் தோளைத் திருப்பிக் கோபமாக வினவ,   "நீங்க சும்மா இருங்க பெரியம்மா. உங்களை பத்தி எல்லாம் எங்கம்மா சொல்லி இருக்காங்க. காரணம் கிடைச்சதும் இவனை பாக்கெட்ல போட்டுகிட்ட மாதிரி என்னையும் போட்டுக்க டிரை பண்ணுறீங்க. இதுல என் அப்பா அம்மா சாவை தற்கொலைன்னு ஃப்ரேம் பண்ணுறீங்களா?" என்றதும்,   தன்னை தவறாக பேசியதைக் கூட உணராதவர், "உன் அப்பா அம்மா பத்தி உனக்கு யாரு சொன்னாங்க டா...

சாரல் 24 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 24   புஷ்பாவின் பேச்சை அங்கிருந்த பலரும் ஆதரிக்க ஆரம்பித்தனர்.   "உங்க பொண்ணு ஊருக்கு போக அந்த பையன் ஏன் கூட போகணும் தம்பி? உங்க வீடு வரை போயிருக்கான். காரணம் இல்லாம போகுமா?" என்று ஊர்த் தலைவர் கேட்க ரவிக்கு பதில் சொல்ல முடியவில்லை.   அதை விட அந்த மதிய நேரத்தில் பளபளப்பான காரின் வந்து இறங்கிய இருவரைக் கண்டு பெரியப்பா பெரியம்மா இருவரும் தயங்கி, தவித்து நிற்பதைக் கண்டு அவன் புரியாமல் பார்க்க,   நிலைமையை மேலும் கவலைக்கிடமாக மாற்ற அந்த பிரதேசத்திற்குள் ஓடி வந்தார் சரோஜா.   "அடப்பாவிகளா ஒரு நாள் தானே என் பிள்ளையை வேலைக்கு கூப்பிட்ட, அதுக்குள்ள உன் வீட்டு பொண்ணு என் பையனை மயக்கி கூட்டிகிட்டு போயிட்டாளா? தெய்வமே நான் என்ன செய்வேன்?" என்று கத்தி கூப்பாடு போட, ஊரார் அவளை முறைத்துக் கொண்டு நின்றனர்.   அதில் அந்த புதியவர்கள் ரகுராமை நெருங்கி, "வாட்ஸ் ஆல் திஸ் மிஸ்டர். ரகு? உங்க தம்பி பசங்க. ரொம்ப நல்ல குணம்னு நீங்க சொல்லவும் தானே நாங்க இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னோம்? இங்க வந்தா பொண்ணு யார் கூடவோ ஓடினதா சொல்றாங்க. இந்த பையன் இ...

சாரல் 20 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 20   " இன்னும் ஏன் இங்கேயே சுத்திகிட்டு இருக்க ? போ என் கண்ணுல படாம போய் தொலை ." என்று எதிரில் நின்ற மகன் மேல் மொத்த கோபத்தையும் கொட்டி விட்டு திண்ணை ஓரத்தில் சாய்ந்து அமர்ந்தார் ஶ்ரீதரன் .   இவன் ஒருவனை மையமாக வைத்து சரோஜா செய்த செயல்கள் தான் எத்தனை ? நல்லது செய்கிறாள் என்று நம்பி அவளுக்கு துணை போய் , இன்று அவமானப்பட்டு நிற்கும் போது விழித்துக் கிடக்கும் புத்தி அன்று அவள் ஆடியபோது ஏன் உறங்கிக் கொண்டிருந்தது என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அப்படியே சரிந்து படுத்தார் .   புகழ் அவர் அருகில் வந்து மன்னிப்பு வேண்டியதோ , அவர் அவனை கவனிக்காமல் இருந்ததால் அழுதபடி வேகமாக வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனதோ அவர் அறியவில்லை .   இந்த வீட்டில் நிலவரம் இப்படி இருக்க , பெரியப்பா பெரியம்மா வந்ததும் அவர்களை உபசரித்து விட்டு அருகில் அமர்ந்தான் ரவீந்தர் .   " இந்த இடம் போதுமா ரவி ?" என்று மனம் பொறுக்காமல் வினவினார் வைதீஸ்வரி .   " பெரியம்மா வீடு சின...