மேற்கே உன் சாரல்மழை 9
சாரல் 9 "எந்த பார்ட்டிக்கு போனாலும் நானும் அம்மா அப்பா கூடவே போவேன் அக்கா. அன்னைக்கு எனக்கு லேசா காய்ச்சல். அம்மா என்னை வர வேண்டாம்னு ரொம்ப அழுத்தமா சொல்லிட்டாங்க. நானும் மாத்திரை போட்டு தூங்கிட்டேன். திடீர்னு வீட்டு வேலை செய்யற பொண்ணு என்னை எழுப்பி கீழ வர சொன்னாங்க. போனா ஒரே போலீஸ். எனக்கு ஒன்னும் புரியலை. திடீர்னு ஊர்ல இருந்து பெரியப்பா வந்து நின்னாரு. ஹாஸ்பிடல் போனா அப்பாவை காட்டல. அம்மா மட்டும் நிறைய மெஷினுக்கு நடுல, ஐ.சி.யூல இருந்தாங்க. அப்பா இறந்துட்டார்ன்னு சொன்னாங்க. என்னால அதை தாங்க முடியல. அப்பறம் அவங்க.. அவங்களும்... அம்மாவும்..." என்று விசும்ப ஆரம்பித்தாள். "அழாத ராகினி. என்னால ஆறுதல் தான் சொல்ல முடியும். உன் வலியை எடுத்துக்கவோ, உன் வேதனையை பகிர்ந்துக்கவோ முடியாது. ஈசியா, 'இறப்பு தவிர்க்க முடியாதது ராகினி'ன்னு உனக்கு நான் சொல்லிடலாம். ஆனா ஒரு இறப்பு ஒருத்தரோட வாழ்க்கையை எப்படி பிரட்டிப் போடும்னு எனக்கு தெரியும். உன் துக்கத்தை நீயே தான் ராகினி ஆத்திக்கிட்டு வெளில வரணும்." என்று வேலி வழியே அவள் கையைப் பற்றினாள். "நான் என் ஃப்ரெண்ட...