சாரல் 1 பனி போர்வை பேர்த்திய மலை முகடுகளும் இருள் விலகாத வானமும் சில்லென்று மேனியை தழுவிடும் தென்றல் காற்றும் சலிக்காமல் ஒவ்வொரு நாளும் புத்துணர்வை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்த அதிகாலை வேளை. வாசலில் அன்னை நீர் தெளித்து விட்டிருக்க, கோலமிட வெளியே வந்து இயற்கையை தனக்குள் மென்மையாக உள்வாங்கிக் கொண்டிருந்தாள் எழிலிசை. தந்தை பின்னால் உள்ள குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டதும், அன்றைய நாளின் அடுத்தடுத்த வேலைகள் வரிசை கட்டப் போவதை உணர்ந்தவளாய், கோலமாவை லாவகமாக வளைத்து வளைத்து கோலம் போட்டு விட்டு அதனை சற்று தள்ளி நின்று ஒரு பார்வை 'சரியாக இருக்கிறதா?' என்று பார்த்தாள். திருப்தியாக மனதிற்குத் தோன்ற, முன்வாசல் வழியாகச் செல்லாமல் பக்கவாட்டில் உள்ள சந்தில் அவள் நுழைய இருந்த நேரம் அவர்கள் வீட்டின் அருகில் ஹார்ன் ஒலி சற்று அதிகமாக ஒலிக்கவே கவனம் கவரப்பட்டு அவ்விடம் தன் பார்வையைத் திருப்பினாள். ஒரு காரும் அதைத் தொடர்ந்து பெரிய லாரி ஒன்றும் வருவது மட்டுமே அந்த பனிக்கு இடையில் தெரிந்தது. யாரேனும் இந்த வழியாக செல்லக் கூடும் என்று ஒதுக்க முடியாது. ஏனெனில் இது ஒன்றும் பெரிய வீதி அல்ல. பல வீடு...
சாரல் 2 சென்னையின் அதிவிரைவு வாழ்க்கைக்குப் பழகிப் போன ராகினி காலையில் இந்த சேதுமடை வந்தது முதலே அண்ணனைக் குடைந்து கொண்டு இருந்தாள். "அண்ணா எப்ப ஊருக்கு போவோம்?எதுக்கு என்னையும் கூட்டிகிட்டு வந்த? எனக்கு எவ்வளவு போர் அடிக்குது தெரியுமா?" என்று ஒரு மணி நேரத்திற்குள் பத்து முறை கூறி விட்ட தங்கையை உக்கிரமாக முறைத்தான் ரவீந்தர். "இங்க பாரு, நானே உன்னால தேவையில்லாம நாலு முறை டேக் எடுக்க வேண்டியதா போச்சுன்னு கடுப்புல இருக்கேன் ராகினி. தயவு செஞ்சு என் ஸ்க்ரீன்ல வராத. இடையில பேசாத. நான் டப்பிங் எல்லாம் பண்ண மாட்டேன். எல்லாமே லைவ் வாய்ஸ் தான். உன் குரல் இடையில கேட்டுக்கிட்டு இருக்கு. அப்பறம் அதுக்கு தனியா நான் ஆடியோ எடிட் பண்ணனும்." என்று கூறியவனைக் கண்டு ராகினி கோபத்துடன், "நானும் அதை தான் சொல்றேன். இத்தனை வருஷத்துல ஒரு தடவையாவது உன்னோட டிரிப்புக்கு என்னை கூட்டிகிட்டு போயிருக்கியா? இப்போ மட்டும் ஏன் என்னை கூட்டிகிட்டு வந்த?" என்று சிறு குழந்தை போல கால்களை தரையில் உதைத்து அவனை விட்டு விலகிச் சென்றாள். போகும் அவளை ஒரு பெருமூச்சுடன் பார்த்துவிட்டு, "அடுத்த வீட...
சாரல் 7 தங்கள் வேனை நோக்கி சற்று வயதான மனிதர் கரடு முரடான பாதையில் நடந்து வருவதை கவனித்த ரவீந்தர் அவருக்கு வெளிச்சம் தெரிவது போல விளக்கைத் தூக்கிப் பிடித்தான். "தம்பி, வணக்கம் பா" என்று அவர் கை கூப்ப, அவனும் விளக்கை அங்கே இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, "வணக்கம் சார்" என்று அவனும் மரியாதையாக கரம் குவித்தான். "என்ன தம்பி இப்படி வெட்ட வெளில வண்டில வந்து தங்கி இருக்கீங்க?"என்று நேரடியாக விஷயத்துக்கு வர, அவன் லேசான தயக்கத்தோடு, "சார் நீங்க?" என்று இழுத்தான். "நான் பக்கத்துல, அதோ தெரியுதே... அந்த வீட்ல இருக்கேன் பா. இங்க தான் சேது மடை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கம்பவுண்டரா இருக்கேன். தனியா ஏன் பா இருக்கீங்க?" என்று அறிமுகம் செய்து கொண்டு வினவினார். "நல்லது சார். இடம் வாங்கி கட்டி இங்கேயே செட்டில் ஆகப்போறோம். வண்டில தங்கிக்க வசதி இருக்கு. அதுனால நான் கிளம்பி வந்தோம். ஒரு பிரச்சனையும் இல்ல." என்று வேனை திறந்து காட்டினான். அதில் பின் புறம் முழுவதும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருக்க, "நீங்க தங்கலாம் சரிதான் தம்பி. ஆனா வயசுப் பிள்ள...
Comments
Post a Comment