இடுகைகள்

சாரல் 70 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 70   கணவனின் குரலில் இருந்த ஏக்கத்தைத் தாண்டிய ஆதரவைத் தேடும் விதமான உணர்வு எழிலிசையை சட்டென்று அசைத்துப் பார்த்து விட்டது.   இதுவே அவன் சாதரணமாக வினவி இருந்தால் அவள் சிரித்துக் கொண்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நீங்க என்கிட்ட ஓடி வாங்க என்று கேலி செய்திருப்பாள். ஆனால் இந்த நொடி அவன் தேடுவது மனைவியை மட்டுமல்ல தோள் சாயத் தோழியும், அரவணைக்க அன்னையும், தாங்கிக் கொள்ள தந்தையும் என்று அவளது தேவை அவனுக்குத் தேவை என்று புரிந்து கொண்டாள்.   அமைதியாக, "போய் நல்லா தூங்கி எழுங்க. காலைல உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்போ சோர்வு தான் உங்களை இப்படி பேச வைக்குது. மாமா அத்தை ரெண்டு பேரும் நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்பறம் இன்னிக்கு மதியம் ட்ரிப் இர்ரிகேஷன் செட் பண்ண வந்தாங்க. இன்னும் அந்த வேலை முடியல" என்று அவள் பேசிக்கொண்டே போக ஏனோ ரவியின் மனம் வருத்தம் கொண்டது.   தன் மனைவிக்கு ஏற்கனவே நிறைய பாரத்தை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது அவளை இங்கே தேவையென்று தேடுவதும் அழைப்பதும் சற்றும் மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றியது. ஆனால் ...

சாரல் 69 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 69   பிரதீஷ் அழைத்து தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறியதும் ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை.   "என்ன கண்டுபிடிச்ச?" என்று அவன் ஆர்வமாக வினவ,   "போன்ல வேண்டாம் மாமா. நாம அதே இடத்துல மீட் பண்ணுவோம்" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட ரவிக்கு அங்கு சென்று அவன் வந்து சேரும் வரும் பரபரப்பாக இருந்தது.   பிரதீஷ் சற்று நேரம் சென்று தான் அங்கு வந்தான். கையில் சில பைல்களை அவன் வைத்திருக்க ரவி அவனிடம் ஆர்வமாக,   "என்னன்னு சொல்லு பிரதீஷ், எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு" என்று அவசரம் காட்டினான்.   "உங்களுக்கு ஏன் மாமா அந்த ஜனகராஜ் மேல சந்தேகம் வந்துச்சு?" என்று இவன் கேள்வி எழுப்ப,   "அதுக்கு தனிப்பட்ட காரணம் இல்ல. அவரோட ஒத்துவராம அப்பா அவரை விலக்கினதா அவர் சொல்லி கேட்டிருக்கேன். இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீர்னு அவர் புது கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் பார்க்கும் போது மனசுல ஒரு வித நெருடல். மத்தபடி அவர் மேல நான் சந்தேகப்பட சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்ல" என்றான் தாடையை தேய்த்தபடி.   "இப்போ இருக்கு." என்று தன்...

சாரல் 68 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 68   ரவியின் பெரியப்பா ரகுராம் தன் மனைவி வைதீஸ்வரியுடன் கிளம்பி ரவியின் பண்ணைக்கு வந்து அதிகாலையில் இறங்கினார்.   ஏனோ முதல் நாள் காலை முதலே வைதீஸ்வரி ரவியைப் பார்க்க வேண்டும், ஏதோ தவறாக மனதுக்கு தோன்றுகிறது என்று கூறிக்கொண்டே இருக்க மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு ரவிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை.   அவருக்குமே அதன் பின் மனம் அலைப்புற எழிலுக்கு அழைத்தார். அவள் அனைவரும் நலமென்று கூறினாலும் ஏனோ அவள் குரலில் சிறு தயக்கம் இருப்பது போல உணர்ந்தவர் தாங்களே நேரில் செல்வது தான் சரியாக இருக்குமென எண்ணி இரவோடு இரவாக கிளம்பி வந்துவிட்டார்.   இன்னும் பகலவனின் வெளிச்ச ரேகைகள் பாரில் பரவவில்லை. இருள் விலகலாமா வேண்டாமா என்று சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது.   காரை கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கி உள்ள வர முயன்றார்.   நிறைய புதிய செயல்பாடுகள் நடைபெற்றிருப்பது அவ்விருளில் கூட அவருக்குப் புலப்பட்டது.   கோழிகளின் கொக் கொக் சத்தமும் கொக்கரிக்கலாமா வேண்டாமா என்ற சேவல்களின் சந்தேக கீதமான 'கொக்கொரக்' என்று பாதியில் நிறுத்தி மீண...

சாரல் 67 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 67   தன் தந்தை ஊர் திரும்புவதாக தகவல் கிடைத்ததுமே அன்னையை அழைத்துப் பேசி விட்டான் பிரதீஷ்.   "அம்மா போலீஸ் வந்ததோ அப்பாவைக் கேட்டதோ, மாமா இன்ஸ்டாகிராம் பத்தி சொன்னது எதுவும் அப்பாவுக்கு தெரிய வேண்டாம். நான் அப்பாவுக்கு தெரியாம எல்லாத்தையும் விசாரிச்சு சரி பண்ணிடுறேன். நேத்து ஏதோ யோசனையில பேசிட்டேன். நீ எதுவும் அப்பா கிட்ட சொல்லிடாத" என்று அன்னையை சமாளித்தான்.   அந்த அப்பாவிப் பெண்மணிக்கோ எங்கே மகன் தன் தந்தையை தவறாக நினைத்து ஏதும் செய்து விடுவானோ என்று முதல் நாளிலிருந்து மனதில் இருந்த பயம் சற்று மறைந்தது.   "ரொம்ப நல்லது டா தம்பி. நான் ரொம்ப பயந்துட்டேன்" என்று கூறிவிட்டு இனி மகன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியுற்றார்.   பிரதீஷ் மனதில் வேறு இருந்ததை அவர் அறியவில்லை. ஏனெனில் அவன் தன் தந்தையின் மறுபக்கத்தையும், ரவி ஏன் தன் அத்தை மாமாவின் மறைவைப் பற்றி மறுபடியும் விசாரிக்க வந்திருக்கிறான், அதற்கும் தன் தந்தைக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.   ரவியை அழைத்துப் பேச முடிவு செய்திருப்...

சாரல் 66 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 66   பிரதீஷ் மிகுந்த கோபத்துடன் சோஃபாவில் தலையை சரித்து அமர்ந்திருந்தான். அவனது அன்னை அவனருகில் வந்து,   "ஏன்டா யாரோ ஏதோ சொன்னா அப்பாவை தப்பா நினைக்கலாமா? அவர் பணம் பணம்ன்னு ஓடுவாரு தான். ஆனா இவங்க சொல்ற மாதிரி அவருக்கு குடும்பத்தைக் கெடுக்கத் தெரியாது டா." என்று கணவருக்காகப் பேசினார்.   "அம்மா நீ சொல்றது உண்மைன்னு வச்சுக்கிட்டாலும் அது எப்படி மா சரியா மாமாவோட பார்ட்னருக்கு வீட்டை வித்து, அவர் கூடவே சில பிஸ்னஸ் டையப் எல்லாம் வச்சு… எப்படி பார்த்தாலும் இடிக்குது. அதை கூட விடு, ராகினி விஷயம். உனக்கே தெரியும் அத்தை நம்ம வீட்டுக்கு வந்து ராகினி உனக்குத்தான்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்காங்க. அவங்க சொத்து போனா என்ன? அவங்க சொந்தம் விட்டுப் போகுமா? மாமாவும் அத்தையும் இறந்ததும் அப்பா அப்படியே அவங்களை கட் பண்ணி விட்டுட்டார். ராகினி பத்தி இப்போதைக்கு எதுவும் பேசாதன்னு என்னை அடக்கி வச்சதும் அவர் தான். அவளுக்கு எப்படி மெசேஜ் அனுப்பி, அதான் புரியல!" என்று எரிச்சலடைந்தான்.   இவர்கள் இங்கே குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஜனகராஜின் புதிய நிறுவனத்தின் தி...

சாரல் 65 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 65 சென்னை வந்து சேர்ந்த ரவிக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது அவன் போட்ட திட்டமன்று. அதனால் முதலில் இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாமல் முதல் நாளை ஒரு கடற்கரை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தான். அவன் எண்ணங்கள் எல்லாம் பின்னோக்கி சென்றவண்ணம் இருந்தது. அவனது தாய்தந்தை இறந்த தினத்தை அமைதியாக அசைபோட்டபடியே இருந்தான். எழில் மதியம் அவனை அழைக்கவே நிகழ்வுக்கு வந்தவன் அவளுடன் பேசிவிட்டு உணவருந்த ஒரு ஓட்டலை நோக்கிச் சென்றான். போகும் வழியில் சில போஸ்டர்கள் அவனை கவனிக்க வைத்தது. அது அவனது தந்தையின் முன்னாள் தொழில் பங்குதாரர் ஒருவரின் நிறுவன விளம்பரங்கள். அவன் கேள்விப்பட்டவரை சில வருடங்களுக்கு முன் இவர் தனியே ஆரம்பித்த தொழில் சரிவடைந்து மிகவும் நலிந்து போனதாக தந்தை பேச்சு வாக்கில் கூறி இருந்தார். இன்று அவர் வளர்ந்துவிட்டது அவனது எந்த வித பொறாமையையும் கொடுக்கவில்லை என்றாலும் ஏதோ ஒன்று அவன் மனதை நெருடியது. பல நாட்களாக பேசாமல் இருந்த தாய் மாமாவுக்கு அவன் போன் செய்ய அவரோ அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவர் குணம் அறிந்தது தான் என்று நினைத்து அந்த பங்குதாரரின் ...

சாரல் 64 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 64   தனக்கான உடைகளை எடுத்து அடுக்கும் மனைவியை பெருமிதமும் ஏக்கமுமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தான் ரவீந்தர்.   அவன் பார்வை வீச்சை தாள முடியாமல், “சன்ஷைன்” என்று அவன் மீது ஒரு துண்டை வீசி எறிந்தாள் எழில்.   அவன் அதற்காகவே காத்திருந்தவன் போல அவளை பின்புறமாக அணைத்துக் கொண்டு,   "அவசியம் போகணுமா? அதுவும் தனியா?" என்று அவளது செவிமடல்களை தன் உதடுகளால் உரசியபடி வினவ,   எங்கோ பறந்து சென்ற மனதை கட்டி நிறுத்திய எழில் தன் கணவனை முன்னே இழுத்து அமர்த்தினாள்.   "என்னப்பா ஏதோ குழந்தை மாதிரி பிஹேவ் பண்றீங்க? இங்க உள்ளதை வீடியோ எடுத்து போட்டதுக்கு, வேலை செஞ்சதுக்கு சின்ன பிரேக் மாதிரி நெனச்சு சென்னை டிரிப் போயிட்டு வாங்க." என்று அவன் சிகையை வருட,   "நான் போக மாட்டேன்னு சொல்லல இசை... நீயும் வா!" என்று குழந்தையாக சிணுங்கினான்.   "எவ்வளவு மெச்சூர்டு பர்சன் நீங்க. ஏதோ விடலை பையன் மாதிரி நடந்துக்கறது நல்லாவே இல்ல." என்று பொய்யாய் கோபம் காட்டி கைகளைக் கட்டிக்கொண்டு அவனுக்கு எதிர்ப்புறம் திரும்பி நின்றாள்.   அவள் கோபத்த...