சாரல் 70 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 70 கணவனின் குரலில் இருந்த ஏக்கத்தைத் தாண்டிய ஆதரவைத் தேடும் விதமான உணர்வு எழிலிசையை சட்டென்று அசைத்துப் பார்த்து விட்டது. இதுவே அவன் சாதரணமாக வினவி இருந்தால் அவள் சிரித்துக் கொண்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு நீங்க என்கிட்ட ஓடி வாங்க என்று கேலி செய்திருப்பாள். ஆனால் இந்த நொடி அவன் தேடுவது மனைவியை மட்டுமல்ல தோள் சாயத் தோழியும், அரவணைக்க அன்னையும், தாங்கிக் கொள்ள தந்தையும் என்று அவளது தேவை அவனுக்குத் தேவை என்று புரிந்து கொண்டாள். அமைதியாக, "போய் நல்லா தூங்கி எழுங்க. காலைல உங்களுக்கு ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். இப்போ சோர்வு தான் உங்களை இப்படி பேச வைக்குது. மாமா அத்தை ரெண்டு பேரும் நீங்க எப்ப வருவீங்கன்னு கேட்டுட்டு இருக்காங்க. அப்பறம் இன்னிக்கு மதியம் ட்ரிப் இர்ரிகேஷன் செட் பண்ண வந்தாங்க. இன்னும் அந்த வேலை முடியல" என்று அவள் பேசிக்கொண்டே போக ஏனோ ரவியின் மனம் வருத்தம் கொண்டது. தன் மனைவிக்கு ஏற்கனவே நிறைய பாரத்தை ஏற்றி வைத்து விட்டு இப்பொழுது அவளை இங்கே தேவையென்று தேடுவதும் அழைப்பதும் சற்றும் மனிதாபிமானம் இல்லாத செயலாகத் தோன்றியது. ஆனால் ...