சாரல் 25 | Tamil Novel | Jeyalakshmi Karthik Novels
சாரல் 25
எழில் சரோஜாவை
அடக்கி அங்கிருந்து அகற்ற நினைக்க அவரோ,
"என்ன
டி நானும் இவங்க வந்ததுல இருந்து பாக்கறேன், நீ தான் ரொம்ப ஒட்டிக்கிட்டு இருக்க? என்
பையனை இங்க வேலைக்கு அனுப்பினது நீ தானே? அந்த பொண்ணு கூட சுத்தினது நீ தானே? என்ன
சொன்ன அவகிட்ட? என் தம்பி இப்படி அப்படின்னு பேசுனியா? அதான் அந்த பொண்ணு இப்படி அவனை
கூட்டிகிட்டு போயிடுச்சா?" என்று அவளிடம் பாய்ந்தார்.
"ஏம்மா
நீ அந்த பொண்ணுக்கு அம்மா தானே? பெத்த பொண்ணை இப்படி பேசுறீங்க?" என்று மனம் பொறுக்காமல்
வைதீஸ்வரி வினவிட,
"இந்தம்மா
இந்த பொண்ணை இதுக்கு மேலயும் பேசும் பெரிய அம்மா. இந்த பிள்ளைக்கு கல்யாணம் பேசிட்டு
இது பண்ணின அலப்பறை எல்லாம் இந்த ஊர்ல உள்ள கல்லு மண்ணுக்கு கூட தெரிஞ்ச கதை. ஆனாலும்
எழில் மாதிரி ஒரு பொறுமைசாலி எப்படித்தான் இதுக்கு மகளா பிறந்ததோ?" என்ற பெண்ணொருவர்,
அங்கு தலை கவிழ்ந்து நிற்கும் ஶ்ரீதரனைக் கண்டு,
"அண்ணே
நீ சின்னதா செஞ்ச ஒரு தப்புக்கு இப்படி இந்தம்மாவை ஆட விட்டு வேடிக்கை பார்த்துட்டு
இருக்க. ஆனா இது எழில் வாழ்க்கைக்கு நல்லது இல்ல. காலா காலத்துல அதுக்கு ஒரு மாப்பிள்ளையை
பார்த்து கட்டிகொடுத்து அனுப்பு." என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அவர்கள் நகர்ந்ததும்
வைதீஸ்வரி ரவியின் அருகில் வந்து அமர்ந்தார்.
"என்ன
ரவி இந்த ராகினி இப்படி செஞ்சுட்டா? ஊர் வாயெல்லாம் அவ ஓடிப்போனதா பேசுதே. இதை எப்படி
சரி பண்ணி நாளைக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது?" என்று வருந்த,
ரகுராம் மனைவியைக்
கடிந்து கொண்டார்.
"அவனே
மனசு ஓடஞ்சு போய் இருக்கான் ஈஸ்வரி. நீயும் ஏன் அவனை கஷ்டப்படுத்துற. முதல்ல ராகினி
வரட்டும். ஏன் போனா, எதுக்கு அந்த பையனோட போனான்னு சொல்லட்டும். அப்பறம் மத்ததை யோசிக்கலாம்."
என்று மனைவியை அமைதி காக்க வைத்தவர் இதயம் தம்பி பிள்ளைகளை நினைத்து உள்ளே துடித்தது.
அதிலும் ரவி
சிறு பழிச் சொல் கூட தாளாதவன். அவன் வரையில் சரியாக இருக்கப் பழகிக் கொண்டதால் ராகினியின்
இன்றைய செயலில் மிகவும் முடங்கி இருந்தான்.
சரோஜாவை வீட்டில்
அடக்கி விட்டு வந்த எழில் சற்றும் யோசிக்காமல் ரவியிடம்,
"ரவி சார்
என் தம்பி காதலிச்சு உங்க தங்கையை கூட்டிகிட்டு போயிருக்க மாட்டான். இந்த ஊர் ஆயிரம்
சொல்லும். அதையெல்லாம் காதுல போடாதீங்க. இன்னும் ரெண்டு மாசத்துக்கு இதை பேசுவாங்க.
அப்பறம் வேற ஏதாவது பேசிட்டு இதை மறந்து போயிடுவாங்க. அதே மாதிரி என் அம்மா எதையாவது
பேசுவாங்க. என் தம்பி வாழ்க்கை போச்சு, மானம் போச்சு அது இதுன்னு. எங்களுக்கு அதெல்லாம்
போய் ஒரு வருஷமாகுது. அவங்க என்ன சொன்னாலும் நீங்க அதுக்கு பதில் சொல்லாதீங்க. உங்க
பையனை கேளுங்கன்னு புகழ் மேல திருப்புங்க. அவனே இப்ப தான் கொஞ்சம் விஷயமெல்லாம் புரிஞ்சு
உங்க கிட்ட வேலைக்கு வந்தான். ஏன் இப்படி ராகினி கூட போனான்னு தெரியல. கண்டிப்பா ஏதாவது
காரணம் இருக்கும். ஆனா எங்கம்மா அதுக்கு ஏதோ சாயம் பூசி ஒன்னு உங்க கிட்ட இருந்து காசு
பார்க்க நினைப்பாங்க. இல்லன்னா வேற ஏதாவது எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம். எதுக்கும்
இடம் கொடுக்க வேண்டாம் சார்." என்று நிறுத்தாமல் கூற,
அவளிடம் வந்த
வைதீஸ்வரி, "ஏன் மா அவங்க உன் அம்மா தானே ஏன் இப்படி பேசுறாங்க? நீயும் ஏன் அவங்களை
விட்டுக் கொடுத்து பேசுற?" என்று அவளிடம் பொறுமையாக விசாரித்தார்.
"விட்டுக்
கொடுக்கல மா. எங்க உங்களை ஏமாத்தி உள்ள பேரையும் கெடுத்து விட்டுடுவாங்களோன்னு பயந்து
உண்மையை பேசுறேன்." என்று வருத்தத்துடன் கூறினாள்.
"அப்படி
எங்களை ஏமாத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது உன் அம்மாவுக்கு?" என்று அவர் வினவ,
"நல்லா
வாழ்ந்து கெட்ட குடும்பம் என் அம்மாவோட பிறந்த வீடு. அவங்களை கல்யாணம் பண்ணும்போது
வீட்ல பைசா இல்ல. என் அப்பா அப்ப பிரைவேட் ஆஸ்பத்திரில வேலை பார்த்துட்டு இருந்தாரு.
பணம் இல்லாம கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட ஒரே மாப்பிள்ளை. நல்ல குணமும் கூட. அதுனால
என் தாத்தா என் அம்மாவை அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாரு. அம்மாவுக்கு பழைய ஆடம்பர
வாழ்க்கை மேல மோகம் அதிகம். ஆனா அப்பா சம்பளம் பத்தல. அப்பா சம்பாதிக்காத காசை நாளைக்கு
பிள்ளை சம்பாதிக்கும் அப்படின்னு பெத்தா, நான் வந்து பிறந்தேன். அப்பறம் அதுலயும் வருத்தம்
வந்து உள்ள பணத்துல வீட்டுக்கு வேண்டியதை குறைச்சு, அவங்க ஆசைப்படி வாழ்ந்தாங்க. அப்பா
எதுவும் சொன்னது இல்ல. அப்பறம் தம்பி பிறந்தான். ஒரே செல்லம் தான். அவனுக்கு எல்லாமே
அவங்க ஆசைப்பட்ட படி கொடுத்து வளர்த்தாங்க. நானும் அப்பாவும் எப்பவும் போல உள்ளதை வச்சு
வாழ்ந்தோம். அவன் படிப்புக்கு பெரிய அளவுல கடன் வாங்கினாங்க. அப்ப அவங்களால அப்பா சம்பளம்
வச்சு மட்டும் சமாளிக்க முடியல. வேலைக்கு போக ஆரம்பிச்சாங்க. இப்போ வரை கடன் கூடுது.
ஆனா குறையல. அவங்க ஆசைப்பட்ட ஆடம்பர வாழ்க்கையும் கிடைக்கல. அதுனால பணம் பார்க்க சந்தர்ப்பம்
வந்தா அம்மா விட மாட்டாங்க. அதுக்காக தான் சொல்றேன். அவங்க என்ன சொன்னாலும் பணம் மட்டும்
கொடுக்காதீங்க." என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
ரவி அவளை அப்பொழுது
தான் ஆழமாக நோக்கினான். அவள் கண்களில் ஆசையின் சாயல் எதுவும் இல்லை. நிதர்சனம் உணர்ந்து
வாழப் பழகிய நிதானம் இருந்தது. அவன் மனதிற்குள் சில எண்ணங்கள் வந்து போனது.
பின் முதல்
நாளில் இருந்து நிலவிய பயம் பதற்றம் எல்லாம் குறைந்து, மனம் சீரானது.
காவல்துறை ஆய்வாளர்
ராகினியும் புகழும் ஊரை நெருங்குவதாகத் தகவலை கைபேசியில் அழைத்துச் சொன்னார்.
ரகுராம் தம்பி
மகன் கண்ணில் திடீரென்று தெரியும் அமைதியை ஆராய்ந்தபடி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.
அவர் எண்ணமெல்லாம்
இனிமேல் இவர்கள் திருமணம் எப்படி நல்ல முறையில் நிகழும்? வந்து சென்ற சொந்தக்காரர்
கண்டிப்பாக அமைதியாக இருக்கப்போவது இல்லை. எப்படி சொந்தங்கள் மத்தியில் ரவிக்கும் ராகினிக்கும்
மதிப்பாக திருமணம் முடிப்பது? என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், சைரன் ஒலி எழுப்பிக்
கொண்டு அந்த பிரதேசத்திற்குள் நுழைந்தது அந்த காவல்துறை வாகனம்.

கருத்துகள்
கருத்துரையிடுக