காதல் அறிமுகம்
காற்றுக்குமிழியா காதல்? கதை அறிமுகம் "உள்ள வாங்க ஈசன் சார்" என்று வரவேற்பாக அழைத்தாள் நறுமலர். "இருக்கட்டும் மலர் மேடம்" என்று தவிர்த்தவரின் முன் இடுப்பில் கையூன்றி நின்றார் சிவகாமி. "நறுமலரை முறைத்தபடி ஏன் டி வயசு பொண்ணு இருக்கிற வீடு, அத்தாக்காரி நீயே அடங்காம இருந்தா, அவளை எப்படி டி பசங்க கூட பேசாதன்னு சொல்றது. உள்ள போடி" என்று நாகரிகமில்லாமல் பேசினார். "நான் வர்றேன் நீங்க உள்ள போங்க" என்று அவரை உள்ளே அனுப்பிய நறுமலர், தன்னை சங்கடமாக பார்த்த ஈசனைக் கண்டு, "அதெல்லாம் கண்டுக்காதீங்க சார். அவங்க ஒரு டிப்பிக்கல் மாமியார் மெடீரியல். இந்த வயசுல நான் யாரோட பேசினா இவங்களுக்கு என்ன? சொன்னலும் கேட்கமாட்டேன்னு தெரிஞ்சு சொல்றாங்க பாருங்க. ஆனா பேத்தியை மட்டும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க. நீங்க இதெல்லாம் கண்டுக்காதீங்க சார். இவங்க பேச்சை நான் பெருசா எடுத்திருந்தா வீட்டுக்காரரும் இல்லாம நான் இவங்க ரெண்டு பேரோட தெருவுக்கு தான் வந்திருப்பேன்." என்று சொன்னவள், "வீட்டிக்குள்ள வரலன்னாலும் தோட்டத்துல சேர் இருக்கு அங்க உட்கார்ந்து பேசலாம் வாங...