சாரல் 7 தங்கள் வேனை நோக்கி சற்று வயதான மனிதர் கரடு முரடான பாதையில் நடந்து வருவதை கவனித்த ரவீந்தர் அவருக்கு வெளிச்சம் தெரிவது போல விளக்கைத் தூக்கிப் பிடித்தான். "தம்பி, வணக்கம் பா" என்று அவர் கை கூப்ப, அவனும் விளக்கை அங்கே இருந்த கொக்கியில் மாட்டிவிட்டு, "வணக்கம் சார்" என்று அவனும் மரியாதையாக கரம் குவித்தான். "என்ன தம்பி இப்படி வெட்ட வெளில வண்டில வந்து தங்கி இருக்கீங்க?"என்று நேரடியாக விஷயத்துக்கு வர, அவன் லேசான தயக்கத்தோடு, "சார் நீங்க?" என்று இழுத்தான். "நான் பக்கத்துல, அதோ தெரியுதே... அந்த வீட்ல இருக்கேன் பா. இங்க தான் சேது மடை கவர்மென்ட் ஆஸ்பத்திரியில கம்பவுண்டரா இருக்கேன். தனியா ஏன் பா இருக்கீங்க?" என்று அறிமுகம் செய்து கொண்டு வினவினார். "நல்லது சார். இடம் வாங்கி கட்டி இங்கேயே செட்டில் ஆகப்போறோம். வண்டில தங்கிக்க வசதி இருக்கு. அதுனால நான் கிளம்பி வந்தோம். ஒரு பிரச்சனையும் இல்ல." என்று வேனை திறந்து காட்டினான். அதில் பின் புறம் முழுவதும் படுக்கை வசதி செய்யப்பட்டு இருக்க, "நீங்க தங்கலாம் சரிதான் தம்பி. ஆனா வயசுப் பிள்ள...