இடுகைகள்

சாரல் 80 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 80 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 80   எழிலிசையும் வைதீஸ்வரியும் ராகினியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினர். அவள் பழைய ராகினியாக இருந்திருந்திருந்தால் சுகமாக படுத்துறங்கி அதனை ரசித்து மகிழ்ந்திருப்பாள்.   ஆனால் இன்றைய ராகினி எறும்புடன் போட்டி போடும் அளவுக்கு சுறுசுறுப்பு நிறைந்தவளாக மாறி இருக்க, அவர்களின் அன்பைக் கனிவோடு அவ்வப்போது மறுத்து தன் தாய்மையின் சுகவேதனைகளைத் தாங்கிக் கொண்டு புகழின் கடையை முழுவதுமாக அவளே கவனித்துக் கொண்டிருந்தாள்.   புகழ் புதிதாக ஆரம்பித்த தொழிலில் கவனம் செலுத்த தன்னால் முயன்றவரை அவனுக்கு உதவினாள்.   எழில் அன்று பெரியவர்களை அழைத்து ராகினிக்கு வளைகாப்பு நடத்த நாள் பார்க்கக் கூறினாள்.   ஶ்ரீதர் தான் செலவுகளைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல,   "அப்பா நம்ம வீட்டு விசேஷம் நீங்க நடத்தி வைக்கணும்ன்னு மட்டும் தான் ஆசைப்படுறோம். செலவெல்லாம் இன்னார் செய்யணும்னு எந்த கட்டாயமும் இல்ல. இப்பவே நாம எல்லாரும் சேர்ந்து தான் பண்ணையில உழைக்கிறோம். நாளைக்கு அவர் கிட்ட சொல்லி சம்பளம் போட சொல்லவா?" என்றாள் உரிமைக் கோபத்துடன்.   "அப்படி இல்லம்மா....