சாரல் 79 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 79 புதிய வீட்டின் முதல் நாள் இரவு. புகழ் ராகினியை தான் மேல் சாய்த்துக் கொண்டு அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தான். இதற்கு முன் அவர்கள் இருக்குவருக்கும் அதிக நெருக்கம் இருந்ததில்லை. காதல் என்ற எண்ணம் வளர்ந்ததில்லை. திருமணம் முடிந்து விட்டது என்பதால் பரஸ்பர அன்போடு இருந்தனர். ஆனால் தாய்மை அடைந்த பின் தான் புகழ் மேல் அவளுக்கு தனி பிரியம் எழுந்தது. தன் அண்ணன் பல கனவுகளுடன் இருந்தவன் என்று அவளறிவாள். ஆனால் புகழ் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் தன்னைப் போலவே பொறுப்புகள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவன் தானே! ஆனால் இன்று தன் அண்ணனுடன் இணைந்து புது புது விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பது, செலவுகளை கட்டுக்குள் வைப்பது, ஊராரின் மரியாதையை ஈட்டிக் கொண்டது என்று அவனது பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதிலும் அவள் என்ன சொன்னாலும் ‘சரி ராணி’ என்ற அவனின் பதில் அவளை குளுமையின் உச்சிக்கு அழைத்துச் சென்றது என்பதே உண்மை. அவள் மீது தவறே இருந்தாலும், அவளே சண்டை போட்டாலும் பொறுத்து, நிதானமாக அந்த தவறை சுட்டிக் காட்டுவதும், எழிலிடம் சென்று குறையாகக் கூறாம...