இடுகைகள்

சாரல் 75 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 75 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 75   வீட்டின் கட்டுமானப் பணிகள் துவங்கி பதினைந்து நாள் முடிந்திருந்தது.   தங்கள் வீட்டை தோட்டத்தின் நடுவே அமைக்க முடிவு செய்து ஏற்கனவே அவ்விடத்தை தொடாமல் விட்டிருந்தனர் எழிலும் ரவியும். இப்பொழுது அது அவர்களுக்கு மிகவும் எளிமையாக வேலையை நிறைவு செய்யப் பயன்பட்டது.   வீடு கட்ட தேர்ந்தெடுத்த இடம் சமதளம் என்பதால் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. கான்கிரீட், சிமெண்ட், கம்பி, ஜல்லி இல்லாத இயற்கை சார்ந்த மரபு வீட்டை கட்டுவதே அவர்கள் நோக்கம் என்பதால் பொருட்களும் அதிக அளவில் அவர்களுக்கு தேவைப்படவில்லை.   கருங்கல் அஸ்திவாரம், கருங்கல் கொண்டு அமைத்த பீம்கள்(தூண்) சுடாத செம்மண்ணால் ஆன கற்கள், மஞ்சனத்தி (நுனா) மரத்தால் ஆன கூரை தாங்கு கட்டைகள் என்று ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக அதனைப் பற்றிய புரிதல் ரவியிடம் இருந்தது   ரகுராம் முதலில் மண்ணால் ஆன வீடு! என்று கூறியதும் திகைத்தார்.   "எப்படி ரவி, மழை வந்தா கரைஞ்சு போயிடுமே!" என்று சந்தேகம் கொள்ள,   "எப்படி ரவி சிமெண்ட், கம்பி ஜல்லி இல்லாம வீடு கட்ட முடியும்?" என்று வைதீஸ்வரிய...