இடுகைகள்

சாரல் 74 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 74 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 74   எழிலும் ரவியும் ஊர் திரும்பி இருந்தனர். ரகுராமிடம் அமைதியாக நடந்தவைகளை விளக்கினான் ரவி.   அவர் கூட அமைதியாக அவன் சொன்னதை கிரகித்துக் கொண்டார். ஆனால் வைதீஸ்வரி மிகவும் உடைந்து போனார்.   "யாருக்கு என்ன பாவம் செய்தோம் மா நாம? தம்பிக்கு அறிவு இருந்தது திறமை இருந்தது நேர்மை இருந்தது, அதோட சேர்த்து தன் உழைப்பையும் போட்டு தானே பணம் சம்பாதிச்சாரு. யாரையும் அவர் ஏமாத்தலையே, ஏன் அந்த ஜனகராஜை கூட தம்பி ஏமாத்தலையே. அவன் பங்கு பணத்தை கொடுத்துட்டு தானே அவன் கையாடல் பண்றான்னு வெளில அனுப்பினார்? ஆனா மனித மனம் எவ்வளவு இழிவா இருக்கு பாரு எழில்! தனக்கு நேர்மையா இருந்தவனை ஏமாற்றின குற்றவுணர்வு இல்லாம தன் மனைவி முன்ன முகத்திரையை கிழிச்சிட்டான்னு தம்பியையும் மேகலாவையும் கொன்னு, ரவியை இப்படி ஏமாத்தி பணத்தை பிடுங்கி. அது போதாதுன்னு ராகினி வாழ்க்கையைக் கெடுக்க நினைச்சு. நல்ல வேளை அவனுக்கு ஒரு பொண்ணு இருக்க போய் ராகினியை நாசம் பண்ணுற எண்ணம் அவனுக்கு வரல போல. இல்லன்னா அந்த ஈனப் பய அதையும் செய்திருப்பான்" என்று கண்ணீரில் வாய் ஓயாமல் அழுது கரைந்தார்.   "நம்மளால ...