சாரல் 72 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 72 தன் கைவளைவில் இருந்த மனைவியைக் கண்டு ரவியின் மனம் நிறைந்து இருந்தது. அன்று போனில் அவன் பேசி வைத்ததும் கடைசி பஸ்சில் ஏறி காலை விடியும்போது சென்னை வந்து விட்டாள். அதிகாலை அவளது எண்ணில் இருந்து அழைப்பு வந்ததும் அரைத்தூக்கத்தில் "என்ன இசை?" என்று கேட்டவனிடம் "கொஞ்சம் வேன் கதவைத் திறங்க சன்ஷைன்" என்றாள். பரபரவென்று எழுந்து கேம்பர் வேனின் கதவைத் திறக்க மலர்ந்த முகமாக கையில் பையுடன் நின்றிருந்தாள். அவளது வருகையை சற்றும் எதிர்பார்த்திராத ரவி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனான். அவளை அருகே இழுத்து மார்போடு அணைத்து நின்றபோது நேற்றிருந்த நிராதரவான மனநிலை காற்றில் மறைந்து யானை பலம் கூடியது போல உணர்ந்தான் ரவி. அவன் இயல்புக்கு வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது. "எப்படி இசை?" என்று அவன் வியந்து கேட்க, "நேத்து உங்களுக்கு பக்கத்துல நான் இருக்கணும்ன்னு தோனி இருக்கு. அதான் உங்களை அறியாம அது வெளில வந்தது. நானும் வந்துட்டேன்." என்று சின்னதாக சொல்லி முடித்தாள். அதன் பின் தான் பிரதீஷ் அவனிடம் காட்டிய கோப்புகள் பற்றி அவளுக்கு விளக்க, "எனக்கென்னவோ உங்க ம...