சாரல் 69 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 69 பிரதீஷ் அழைத்து தான் கண்டுபிடித்துவிட்டதாக கூறியதும் ரவிக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்ன கண்டுபிடிச்ச?" என்று அவன் ஆர்வமாக வினவ, "போன்ல வேண்டாம் மாமா. நாம அதே இடத்துல மீட் பண்ணுவோம்" என்றவன் அழைப்பைத் துண்டித்துவிட ரவிக்கு அங்கு சென்று அவன் வந்து சேரும் வரும் பரபரப்பாக இருந்தது. பிரதீஷ் சற்று நேரம் சென்று தான் அங்கு வந்தான். கையில் சில பைல்களை அவன் வைத்திருக்க ரவி அவனிடம் ஆர்வமாக, "என்னன்னு சொல்லு பிரதீஷ், எனக்கு தலை வெடிச்சிடும் போல இருக்கு" என்று அவசரம் காட்டினான். "உங்களுக்கு ஏன் மாமா அந்த ஜனகராஜ் மேல சந்தேகம் வந்துச்சு?" என்று இவன் கேள்வி எழுப்ப, "அதுக்கு தனிப்பட்ட காரணம் இல்ல. அவரோட ஒத்துவராம அப்பா அவரை விலக்கினதா அவர் சொல்லி கேட்டிருக்கேன். இத்தனை வருஷம் இல்லாம இப்ப திடீர்னு அவர் புது கம்பெனி, பிஸ்னஸ் எல்லாம் பார்க்கும் போது மனசுல ஒரு வித நெருடல். மத்தபடி அவர் மேல நான் சந்தேகப்பட சாலிடான எவிடென்ஸ் எதுவும் இல்ல" என்றான் தாடையை தேய்த்தபடி. "இப்போ இருக்கு." என்று தன்...