சாரல் 68 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 68 ரவியின் பெரியப்பா ரகுராம் தன் மனைவி வைதீஸ்வரியுடன் கிளம்பி ரவியின் பண்ணைக்கு வந்து அதிகாலையில் இறங்கினார். ஏனோ முதல் நாள் காலை முதலே வைதீஸ்வரி ரவியைப் பார்க்க வேண்டும், ஏதோ தவறாக மனதுக்கு தோன்றுகிறது என்று கூறிக்கொண்டே இருக்க மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு ரவிக்கு அழைக்க அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவருக்குமே அதன் பின் மனம் அலைப்புற எழிலுக்கு அழைத்தார். அவள் அனைவரும் நலமென்று கூறினாலும் ஏனோ அவள் குரலில் சிறு தயக்கம் இருப்பது போல உணர்ந்தவர் தாங்களே நேரில் செல்வது தான் சரியாக இருக்குமென எண்ணி இரவோடு இரவாக கிளம்பி வந்துவிட்டார். இன்னும் பகலவனின் வெளிச்ச ரேகைகள் பாரில் பரவவில்லை. இருள் விலகலாமா வேண்டாமா என்று சடுகுடு ஆடிக்கொண்டிருந்தது. காரை கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கி உள்ள வர முயன்றார். நிறைய புதிய செயல்பாடுகள் நடைபெற்றிருப்பது அவ்விருளில் கூட அவருக்குப் புலப்பட்டது. கோழிகளின் கொக் கொக் சத்தமும் கொக்கரிக்கலாமா வேண்டாமா என்ற சேவல்களின் சந்தேக கீதமான 'கொக்கொரக்' என்று பாதியில் நிறுத்தி மீண...