சாரல் 67 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 67 தன் தந்தை ஊர் திரும்புவதாக தகவல் கிடைத்ததுமே அன்னையை அழைத்துப் பேசி விட்டான் பிரதீஷ். "அம்மா போலீஸ் வந்ததோ அப்பாவைக் கேட்டதோ, மாமா இன்ஸ்டாகிராம் பத்தி சொன்னது எதுவும் அப்பாவுக்கு தெரிய வேண்டாம். நான் அப்பாவுக்கு தெரியாம எல்லாத்தையும் விசாரிச்சு சரி பண்ணிடுறேன். நேத்து ஏதோ யோசனையில பேசிட்டேன். நீ எதுவும் அப்பா கிட்ட சொல்லிடாத" என்று அன்னையை சமாளித்தான். அந்த அப்பாவிப் பெண்மணிக்கோ எங்கே மகன் தன் தந்தையை தவறாக நினைத்து ஏதும் செய்து விடுவானோ என்று முதல் நாளிலிருந்து மனதில் இருந்த பயம் சற்று மறைந்தது. "ரொம்ப நல்லது டா தம்பி. நான் ரொம்ப பயந்துட்டேன்" என்று கூறிவிட்டு இனி மகன் பார்த்துக் கொள்வான் என்று நிம்மதியுற்றார். பிரதீஷ் மனதில் வேறு இருந்ததை அவர் அறியவில்லை. ஏனெனில் அவன் தன் தந்தையின் மறுபக்கத்தையும், ரவி ஏன் தன் அத்தை மாமாவின் மறைவைப் பற்றி மறுபடியும் விசாரிக்க வந்திருக்கிறான், அதற்கும் தன் தந்தைக்கும் என்ன தொடர்பு என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுடன் இருந்தான். ரவியை அழைத்துப் பேச முடிவு செய்திருப்...