சாரல் 66 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 66 பிரதீஷ் மிகுந்த கோபத்துடன் சோஃபாவில் தலையை சரித்து அமர்ந்திருந்தான். அவனது அன்னை அவனருகில் வந்து, "ஏன்டா யாரோ ஏதோ சொன்னா அப்பாவை தப்பா நினைக்கலாமா? அவர் பணம் பணம்ன்னு ஓடுவாரு தான். ஆனா இவங்க சொல்ற மாதிரி அவருக்கு குடும்பத்தைக் கெடுக்கத் தெரியாது டா." என்று கணவருக்காகப் பேசினார். "அம்மா நீ சொல்றது உண்மைன்னு வச்சுக்கிட்டாலும் அது எப்படி மா சரியா மாமாவோட பார்ட்னருக்கு வீட்டை வித்து, அவர் கூடவே சில பிஸ்னஸ் டையப் எல்லாம் வச்சு… எப்படி பார்த்தாலும் இடிக்குது. அதை கூட விடு, ராகினி விஷயம். உனக்கே தெரியும் அத்தை நம்ம வீட்டுக்கு வந்து ராகினி உனக்குத்தான்னு எவ்வளவு தடவை சொல்லி இருக்காங்க. அவங்க சொத்து போனா என்ன? அவங்க சொந்தம் விட்டுப் போகுமா? மாமாவும் அத்தையும் இறந்ததும் அப்பா அப்படியே அவங்களை கட் பண்ணி விட்டுட்டார். ராகினி பத்தி இப்போதைக்கு எதுவும் பேசாதன்னு என்னை அடக்கி வச்சதும் அவர் தான். அவளுக்கு எப்படி மெசேஜ் அனுப்பி, அதான் புரியல!" என்று எரிச்சலடைந்தான். இவர்கள் இங்கே குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில் ஜனகராஜின் புதிய நிறுவனத்தின் தி...