சாரல் 65 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 65 சென்னை வந்து சேர்ந்த ரவிக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது அவன் போட்ட திட்டமன்று. அதனால் முதலில் இதை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாமல் முதல் நாளை ஒரு கடற்கரை ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தான். அவன் எண்ணங்கள் எல்லாம் பின்னோக்கி சென்றவண்ணம் இருந்தது. அவனது தாய்தந்தை இறந்த தினத்தை அமைதியாக அசைபோட்டபடியே இருந்தான். எழில் மதியம் அவனை அழைக்கவே நிகழ்வுக்கு வந்தவன் அவளுடன் பேசிவிட்டு உணவருந்த ஒரு ஓட்டலை நோக்கிச் சென்றான். போகும் வழியில் சில போஸ்டர்கள் அவனை கவனிக்க வைத்தது. அது அவனது தந்தையின் முன்னாள் தொழில் பங்குதாரர் ஒருவரின் நிறுவன விளம்பரங்கள். அவன் கேள்விப்பட்டவரை சில வருடங்களுக்கு முன் இவர் தனியே ஆரம்பித்த தொழில் சரிவடைந்து மிகவும் நலிந்து போனதாக தந்தை பேச்சு வாக்கில் கூறி இருந்தார். இன்று அவர் வளர்ந்துவிட்டது அவனது எந்த வித பொறாமையையும் கொடுக்கவில்லை என்றாலும் ஏதோ ஒன்று அவன் மனதை நெருடியது. பல நாட்களாக பேசாமல் இருந்த தாய் மாமாவுக்கு அவன் போன் செய்ய அவரோ அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவர் குணம் அறிந்தது தான் என்று நினைத்து அந்த பங்குதாரரின் ...