இடுகைகள்

சாரல் 63 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 63 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 63   எழில் தன் தம்பியுடன் பேசிய நிம்மதியான மனதுடன் வீடு வந்து சேர, ரவி இருப்பதற்கான சுவடே இல்லாமல் வீடும் முன்னால் இருந்த இடமும் காலியாக இருந்தது.   ரவியோ ஒருவித வெறுமையான மனநிலையில் இருந்தான். ஆரம்பத்தில் சரோஜாவிடம் கோபம் காட்டி, ஆளுமை கூட்டி பேசியவனுக்கு புகழும் ஶ்ரீதரனும் கொடுக்கும் மரியாதையும் அன்பும் அதனை தொடர முடியாமல் சங்கடத்தில் ஆழ்த்தியது.   மாமியாரின் கடன் தீர்ந்தால் மாறிவிடுவார் என்று நம்பி அதையும் புகழ் பெயரில் செய்த பின்னும் அவர் மாறாமல் போனது அவனுக்கு வருத்தத்துடன் அயர்வைக் கொடுத்தது.   சிறுபிள்ளையின் விரல் சூப்பும் பழக்கத்தை மாற்றுவது கூட எளிது தான் போல, சரோஜாவின் எண்ணத்தை மாற்ற இயலாமல் ரவி அனைத்தையும் எழிலிசை பார்த்துக் கொள்வாள் என்று தன் பணியின் கவனம் செலுத்தினான். ஆனால் இன்று மாமியாரைத் தூண்டி விட்டு பிரச்சனைக்கு வித்திட்டது தன் தங்கை என்று தெரிந்தும் அவனுக்கு வெறுத்து விட்டது.   இவர்கள் எல்லாம் நன்றாக வாழத் தானே இந்த அளவுக்கு கடினமான காரியங்களைக் கூட தயங்காமல் செய்கிறோம் ஆனால் ஏன் இவர்களுக்கு அது புரியவில்லை என...