சாரல் 62 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 62 தன்னை புரிந்து கொண்டது போல பேசும் தன் தம்பியை எண்ணி மனதில் மகிழ்ந்தபடி, "நான் தான் டா. என்னை நெனச்சு எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு."என்று அவனின் கரத்தின் மேல் தன் கரத்தைப் பதித்தாள். "அக்கா, எனக்கு புரியல" என்று அவன் விழிக்க, "அம்மாவுக்கு என்னை பிறந்ததுல இருந்தே பிடிக்காது. அப்பா அவர் எல்லாருக்கும் இடையில் மாட்டிகிட்டு தவிக்கிற ஜீவன். நீ பக்குவப்படாதவன். இப்படி சூழ்நிலையில் தான் நான் என்னையும் என் மனசையும் எல்லாத்துக்கும் தயாரா வச்சிருந்தேன். அதான் அம்மா முன்னாடி கல்யாண ஏற்பாடு பண்ணின்னப்ப கூட நான் சம்மதம் சொன்னேன். என் மனசுல உன் மாமா எப்பாவோ வந்துட்டார். எங்க கல்யாணம் நடக்கும்ன்னு நான் கனவுல கூட நினைச்சது இல்ல. இப்ப வரைக்கும் உன் மாமாவுக்கு கூட அவரை நான் விரும்பினேன்னு தெரியாது. அவரோட சேனல் பார்த்து என் மனசுல அவர் மேல அன்பு வந்தது. நடக்காதுன்னு என்னை நானே சமாதானம் பண்ணிட்டு இருந்தேன். எதிர்பாராத விதமா அவர் இங்க வந்தது, எங்க கல்யாணம், உனக்கும் ராகினிக்கும் கல்யாணம் எல்லாமே நடந்தது. ஆனா அம்மாவோட இன்செக்யுரிட்டினால மறுபடி எதுவும் ...