சாரல் 61 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 61 தன்னிடம் நிறுத்தாமல் அவருடைய மகளைப் பற்றி குறைத்துப் பேசும் மாமியாரை வெற்றுப் பார்வை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள் ராகினி. "இங்க பாரு மா, நீ பெரிய இடத்தில வளர்ந்த பொண்ணு, உன்னை இப்படி தகர கொட்டகைல உங்க அண்ணன் உட்கார வச்சு இருக்கான். அவன் நினைச்சு இருந்தா வாடகைக்கோ, ஒத்திக்கோ ஒரு பெரிய வீடு எடுத்து கொடுத்து இருக்கலாம். அவனும் செய்வான் தான். உன் கல்யாணத்துல அவ்வளவு உறுதியா இருந்தானே! ஆனா செய்யல. ஏன்? அவ செய்ய விட மாட்டா. அவளுக்கு தான் நல்லா வாழலன்னாலும் நாங்க நல்லா வாழ்ந்திட கூடாதுன்னு ஒரு எண்ணம்."என்று பெருமூச்சு விட்டார். ராகினி நுனி நாக்கு வரை, 'அந்த எண்ணம் அவங்களுக்கா இல்ல உங்களுக்கா?' என்று கேட்க காத்திருந்த கேள்வியை சிரமப்பட்டு விழுங்கினாள். அவளுக்கு எழில் மேல் ஒரு வித நம்பிக்கை இருந்தது. தன் அண்ணன் மேல் தான் அது இல்லை. ஆனால் இன்றைய தேதியில் எழில் கூறினாலும் ரவி அவள் கோரிக்கையை ஏற்று புகழுக்கு கம்பெனி வைத்துத் தருவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. தன் கணவன் என்ற பிடிப்பு அவன் மேல் தோன்றாவிட்டாலும் அவன் மேல் ஏற...