இடுகைகள்

சாரல் 60 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 60 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 60 காலை வேளையில் ஆட்களை வரவழைத்து மலர் கொத்தில் வைக்கும் பிரத்யேக மலர்களை பயிரிடும் வேலைகளை ஆரம்பித்திருந்தாள் எழில்.   ரவி அவளுக்கு துணையாக நின்று கொண்டிருந்தான்.   "என்ன இசை திடீர்னு போக்கே ஃபிளவர்ஸ் வைக்கலாம்ன்னு உனக்கு யோசனை வந்தது?" என்று கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாக வினவினான்.   "எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா சன்ஷைன்? உங்க கிட்ட இருந்த பணம் மொத்தமும் கல்யாணம், புகழ் கடைக்குன்னு செலவு செஞ்சுட்டீங்க. இந்த மாசமே இத்தனை நாளா வெளில எடுக்காத ஷேர்ஸ் பணம் வச்சு தான் அடுத்தடுத்த செலவுக்கு பிளான் பண்ணி இருக்கீங்க" என்று அவளும் கையைக் கட்டிக்கொண்டு ரவியை குற்றப்படுத்தும் பார்வை பார்த்தபடி வினவினாள்.   "ஆமா இசை ஷேர்ஸ் பணமும் நம்மளுது தானே? இப்போ போட்டு இருக்குற மீன், கீரை எல்லாம் இன்னும் ரெண்டு மாசத்துல பலன் கொடுக்கும் தானே? அதெல்லாம் யோசனை பண்ணி தான் பவர் சோர்ஸ் போட பணம் எடுக்க நினைச்சேன்." என்று பொறுமையாக பதில் கூறினான்.   "நம்ம பணம் தான். ஆனா அள்ள அள்ள குறையாம இருக்க உங்க பேங்க் அக்கவுண்ட...