சாரல் 59 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 59 மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் தன் வாழ்க்கை பயணத்தை அமைதியாக பயணித்துக் கொண்டிருந்தான் ரவி. எழிலின் துணை அவனுக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது. பண்ணைக் குட்டையின் பக்கத்தில் கீரை வைத்தது சில நாட்களில் நல்ல பலனைக் கொடுத்தது. புகழ் ரவிக்கு உதவியாக மின் உபயோக பொருட்களுக்கான உதவிகள் அனைத்தையும் செய்து வந்தான். ரவி தற்சார்பு வாழ்க்கை பற்றி கூறியதும் புகழுக்கு அது புதிதாக இருந்தது. அதிலும் அரசை எதற்கும் சாராமல் நாமே வாழ்வது முடியும் காரியம் தானா என்ற சந்தேகம் அவனை ஆட்கொண்டது. நாம் ஒவ்வொரு விஷயத்திற்கும் அரசுக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால் அதன் சலுகைகளை அனுபவிக்காமல் தானே உற்பத்தி செய்து வாழ்வது எவ்வகையில் சாத்தியம் என்று அவன் புரிந்து கொள்ள இயலாமல் தவித்தான். அன்று கடையில் சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு மாலை ஏழுக்கே வீடு வந்து சேர்ந்திருந்தான். வந்தவன் நேராக தன் வீட்டிற்குச் செல்லாமல் வாசலில் மடிக்கணினியுடன் அமர்ந்திருந்த ரவியிடம் சென்று அமர்ந்து கொண்டான். "மாமா. உங்க அடுத்த பிளான் என்ன?” என்...