இடுகைகள்

சாரல் 58 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 58 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
 சாரல் 58 நாட்கள் அதன் போக்கில் கடந்து செல்ல புகழும் ராகினியும் வீடு திரும்பி இருந்தனர். ராகினியிடம் நிறைய மாற்றம் தென்பட்டது. வாசலில் சாக்பீஸ் கொண்டு ஏதோ வரைந்தாள். சமையல் என்ற பெயரில் உப்பு புளி வைத்து ஏதோ செய்தாள். அடிக்கடி எழிலிடம் எப்படி வேலைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு செய்து வந்தாள். ரவிக்கு ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும் அதை மிஞ்சிய ஆச்சரியம் நிரம்பி வழிந்தது. எழிலிடம் இதைப் பற்றி வினவ, "இன்னிக்கு நைட் அவங்களுக்கு விருந்து வைக்கிறேன்னு வர சொல்லி இருக்கேன். அப்ப நீங்களே உங்க தங்கச்சி கிட்ட நேர்ல கேட்டுக்கோங்க" என்று சிரித்துக் கொண்டே விலகிச் சென்றாள். அன்று பக்கத்தில் இருந்த விவசாயக் கல்லூரியில் இருந்து அவன் தெரிந்து கொண்டு வந்த பண்ணைக் குட்டை என்பதை செயல்படுத்த எக்ஸ்கவேட்டர் இயந்திரம் கொண்டு வீட்டை விட்டு சற்று தள்ளி அந்த பேராசிரியர் குறிப்பிட்ட இடத்தில் குட்டைக்காக குழி வெட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆட்கள் கொண்டு குழி தோண்டுவது என்றால் குறைந்தது நான்கு நாட்கள் ஆகும் வேலையை அந்த இயந்திரம் அதன் போக்கில் நான்கு மணி நேரத்தில் முடித்து விட்டுச் சென்றது. அதன...