சாரல் 54 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels
சாரல் 54 புகழும் ராகினியும் ரகுராமுடன் கிளம்பிச் சென்று விட, ரவி யோசனை முகமாக அவ்விடத்தில் ஏற்கனவே ஆரம்பித்திருந்த வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தான். காலையில் வீட்டு வேலைகளை முடித்த எழில் அமைதியாக ரவியின் அருகில் வந்து நிற்க, தருவிக்கப்பட்ட ஒரு புன்னகையை அளித்தவன், "சாப்பிட்டியா இசை?" என்று அன்புடன் வினவினான். "நான் சாப்பிடுறது எல்லாம் இருக்கட்டும் சன்ஷைன், நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? உங்க மனசை எது போட்டு இப்படி அறிச்சுக்கிட்டு இருக்கு? என்கிட்ட சொல்லுங்க." என்று அவனது வலது கரத்தைப் பற்றி தன் கைகளுக்கு இடையில் வைத்து அதனை கன்னத்தோடு வைத்தாள். "ஒன்னும் இல்ல இசை" என்று சமாளிப்பாக ரவீந்தர் உரைக்க, "ஏன் பா நான் உங்க மனசுல உள்ளதை புரிஞ்சுக்க மாட்டேன்னு உங்களுக்கு தோனுதா? அப்படியே இருந்தாலும் கண்டிப்பா ஆறுதலா இருப்பேன், உங்க மனபாரம் இறங்கும்ல?" என்று மேலும் குரலில் மென்மையைக் கூட்டி வினவினாள். ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்ட ரவி, "நான் இங்க இடம் வாங்கிட்டு வந்தது ஒரு எண்ணத்துல, அது நடக்குமான்ணு இப்போ தெரியல...