இடுகைகள்

சாரல் 53 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாரல் 53 | Tamil Novels | Jeyalakshmi Karthik Novels

படம்
  சாரல் 53   ரவி வீட்டில் நுழையும் போது உணவு மேசையில் ரகுராமும் வைதீஸ்வரியும் அமர்ந்து காலை உணவை உட்கொண்டு இருக்க,   அவர்கள் அருகில் நின்று பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தாள் எழில்.   "வாசல்ல கோலம், ருசியா சாப்பாடு, பக்கத்துல இருந்து பரிமாறும் பக்குவம், நீ ரொம்ப நல்ல பொண்ணு மா" என்று வைதீஸ்வரி எழிலை புகழ,   "எனக்கு இதுல ஒரு சந்தோஷம் கிடைக்குது அத்தை. அதான் செய்றேன். இதை செய்யாத பொண்ணுங்களும் நல்ல பொண்ணுங்க தான். இதெல்லாம் தெரிஞ்ச நான் உயர்ந்தவளும் இல்ல, தெரியாத பெண்கள் குறைஞ்சவங்களும் இல்ல." என்று சிரித்த முகமாக கூறினாள் எழில்.   "சூப்பர் அண்ணி. நல்லா சொல்லு. இந்த புகழ் காலைலயே வந்து நாளைக்கு நீ தான் சமைக்கணும். இன்னிக்கு என் அக்கா கொடுத்தது சரி, இனியும் அக்காவை எதிர்பார்க்க முடியாதுன்னு காதுல இரத்தம் வர பேசுறான்." என்று குற்றம் கூறிக்கொண்டு அமர்ந்தாள்.   எழில் அவளுக்கும் ரவிக்கும் தட்டை எடுத்து வைக்க,   ரவி எதுவும் கூறாமல் எழில் கொடுத்த உணவை உண்டான்.   ராகினி சாப்பிட்டாலும் வாய் என்னவோ என்னால் வேலை செய்ய முடியா...